சினிமா

Yogi Babu Birthday: பாலிவுட் வரை ஃபேமஸ்... யோகி பாபு சம்பளம், சொத்து மதிப்பு இத்தனை கோடியா..?

Comedy Actor Yogi Babu Net Worth : காமெடியன், ஹீரோ என மாஸ் காட்டி வரும் யோகி பாபு இன்று தனது 39வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். கோலிவுட்டில் இருந்து பாலிவுட் வரை ஃபேமஸ் ஆகியுள்ள யோகி பாபுவின் சம்பளம், சொத்து மதிப்பு குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

Yogi Babu Birthday: பாலிவுட் வரை ஃபேமஸ்... யோகி பாபு சம்பளம், சொத்து மதிப்பு இத்தனை கோடியா..?
Comedy Actor Yogi Babu Saley and Net Worth
Comedy Actor Yogi Babu Net Worth : சினிமாவில் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டாக இருந்து பிரபலமானவர்களில் காமெடி நடிகர் யோகி பாபுவும்(Actor Yogi Babu) முக்கியமானவர். பல படங்களில் கூட்டத்தோடு கூட்டமாக ஒரு ஓரமாக நின்றிருந்த யோகி பாபு, இன்று ஹீரோவாக நடிக்கும் அளவிற்கு விஸ்வரூபம் எடுத்துள்ளார். கோலிவுட் மட்டுமின்றி பாலிவுட்டிலும் ஃபேமஸாகிவிட்ட யோகி பாபு, இந்தி சூப்பர் ஸ்டார் ஷாருக்கானுடன் சென்னை எக்ஸ்பிரஸ், ஜவான் படங்களில் நடித்திருந்தார். கோலிவுட்டிலும் டாப் ஹீரோக்களின் காமெடி பார்ட்னருக்கு முதல் சாய்ஸ் யோகி பாபு தான். இன்னொரு பக்கம் கிரிக்கெட் தல தோனியின் நெருங்கிய நட்பிலும் யோகி பாபு இருப்பது குறிப்பிடத்தக்கது. 
 
சூப்பர் ஸ்டார் ரஜினி, தளபதி விஜய், அல்டிமேட் ஸ்டார் அஜித், சிவகார்த்திகேயன், தனுஷ், விஜய் சேதுபதி, ஜெயம் ரவி உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ளார் யோகி பாபு(Yogi Babu With Leading Actors). அதுமட்டுமா, கோலமாவு கோகிலா படத்தில் நயன்தாராவுடன் டூயட் பாடி, ரசிகர்களுக்கு ஜெர்க் கொடுத்தார். அதேபோல் ஹீரோ, லீட் ரோல் என மாஸ் காட்டியுள்ள அவர், பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களில் குணச்சித்திர கேரக்டர்களில் நடித்தும் ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தினார். இன்னொரு பக்கம் யோகி பாபுவின் காமெடி மீது கடும் விமர்சனங்கள் வராமலும் இல்லை. ஒரேமாதிரியான ரியாக்ஷன், கவுண்டமணி, சந்தானம் போல அதே ஜானர் கவுண்டர் அட்டாக் காமெடி, க்ரிஞ் மாதிரியான மொக்கை வசனங்கள் மட்டுமே பேசி நடிப்பதாகவும் நெட்டிசன்களால் சொல்லப்படுகிறது. 

ஆனாலும் இன்றைய தேதியில் பிஸியான காமெடி நடிகராக வலம் வருகிறார் யோகி பாபு. இரவு, பகல் பாராமல் ஒரேநாளில் ஒன்றிரண்டு படங்களின் படப்பிடிப்பில் பங்கேற்று வருகிறார். இதனால் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கி வருகிறாராம் யோகி பாபு. ஆரம்ப காலங்களில் நூற்றுக்கும் ஆயிரத்துக்கும் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டாக நடித்து வந்த யோகி பாபு, இப்போது ஒரு படத்துக்கு ஒரு கோடி ரூபாய்(Yogi Babu Salary) வரை சம்பளம் வாங்குகிறாராம். அதேபோல் ஒருநாள் சம்பளம் என்றால் 10 லட்சம் ரூபாய் வரை வாங்கி வருகிறாராம் யோகி பாபு. 
 
அதுமட்டுமில்லாமல் யோகி பாபுவுக்கு என தனியாக கேரவன் வசதியும் செய்து கொடுக்கப்படுகிறதாம். இதனால் அவருக்கு ராஜபோக வாழ்க்கை தான் என சொல்லப்படுகிறது. சென்னையில் பிரம்மாண்டமாக வீடு கட்டியுள்ள யோகி பாபு(Yogi Babu House), இன்னோவா, பிஎம்டபிள்யூ போன்ற சொகுசு கார்களையும் சொந்தமாக வைத்துள்ளாராம். இதுதவிர சம்பாதிக்கும் பணத்தை ரியல் எஸ்டேட் போன்ற பல தொழில்களில் முதலீடு செய்து, அதன் மூலமும் பல கோடிகளை வருமானமாக ஈட்டி வருகிறார். ஆகமொத்தம் யோகி பாபுவின் சொத்து மதிப்பு(Yogi Babu Net Worth) 50 கோடி ரூபாய் வரை இருக்கும் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

யோகி பாபு மாதிரியே பிஸியாக வலம் வந்த இன்னொரு காமெடி நடிகர் என்றால் அது சூரி தான். அவரும் இனி ஹீரோவாக மட்டுமே நடிக்கவிருப்பதால், காமெடி கேரக்டருக்கு யோகி பாபுவை விட்டால் வேறு ஆள் இல்லை. இதனால் இனிவரும் நாட்களிலும் யோகி பாபுவுக்கு செமயான மார்க்கெட்(Yogi Babu Market) இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இன்று பிறந்தநாள் கொண்டாடி வரும் யோகி பாபுவுக்கு சினிமா பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர். யோகி பாபு நடிப்பில் அடுத்து விஜய்யின் தி கோட், சூர்யாவின் கங்குவா ஆகிய படங்கள் விரைவில் வெளியாகவுள்ளன.