சென்னை வளசரவாக்கம் பகுதியில் போதைப்பொருள் பயன்படுத்தப்படுவதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் போலீசாரால் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில், திரைப்பட நட்சத்திரங்கள் உட்பட ஒரு கும்பல் பிடிபட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விசாரணையில் சிக்கிய நடிகைகள்
முதலில் விக்னேஸ்வரன் என்ற இளைஞரைப் பிடித்து விசாரித்த காவல்துறையினர், அவரிடமிருந்து 'மெத்தம்பேட்டமைன்' எனப்படும் வீரியமிக்க போதைப்பொருளைக் கைப்பற்றினர். அவரிடம் நடத்தப்பட்ட தொடர் விசாரணையில், அவருக்கு போதைப்பொருள் சப்ளை செய்த வெங்கடேஷ் குமார் என்பவர் சிக்கினார். இவர்களிடம் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில், மலையாளத் திரையுலகில் அறிமுகமாகி தமிழில் 'வெள்ளிமலை' படத்தில் நடித்த அஞ்சு கிருஷ்ணா மற்றும் துணை நடிகை நிவேதா ஆகியோருக்கு இதில் தொடர்பு இருப்பது தெரியவந்தது.
பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்கள்
இந்தச் சோதனையில் நடிகை அஞ்சு கிருஷ்ணா, நிவேதா ஆகியோருடன் கார்த்திக் ராஜா, எஸ்வந்த், ஸ்ரீராம், தமிம் நிஸ்வான் உள்ளிட்ட 9 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 6 கிராம் மெத்தம்பேட்டமைன், 7 கிராம் ஒஜி கஞ்சா, 15 கிராம் சாதாரண கஞ்சா, புகைபிடிக்கும் போங் கருவிகள் மற்றும் 9 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. நடிகை அஞ்சு கிருஷ்ணா மலையாளத்தில் 'ஆகாசம் கடன்' என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
திரையுலகில் தொடரும் சர்ச்சைகள்
கடந்த ஆண்டு நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா ஆகியோர் போதைப்பொருள் விவகாரத்தில் கைதான சம்பவமே இன்னும் மறையாத நிலையில், தற்போது நடிகை ஒருவர் பிடிபட்டிருப்பது கோலிவுட் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கைது செய்யப்பட்ட 9 பேர் மீதும் போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

LIVE 24 X 7