தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக உச்ச நட்சத்திரமாக வலம்வரும் நடிகர் அஜித் குமார். தற்போது தனது புதிய படங்களின் வேலைப்பாடுகளில் பிஸியாக இருக்கிறார். சினிமாவையும் தாண்டி, கார் ரேசிங், பைக் ரேசிங் உள்ளிட்ட போட்டிகளில் பங்கேற்று பரிசும் பெற்றும் வருகிறார். அதுமட்டுமில்லாமல், சமீபத்தில், அஜித்குமார் ரேசிங் என்ற பெயரில் புதிய யூடியூப் சேனல் அவரது கார் ரேசிங் தொடர்பான செயல்பாடுகளை மையமாகக் கொண்டு இயங்குகிறது.
மேலும், அந்த சேனலில், நடிகர் அஜித் குமார் பங்கேற்கும் கார் பந்தயங்கள், பயிற்சி வீடியோக்கள் மற்றும் அவர் தொடர்புடைய பிற உள்ளடக்கங்கள் பகிரப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஐரோப்பா 24H கார் ரேஸில் அஜித் பங்கேற்றிருந்தபோது, போட்டியின் இடையே பேட்டியளித்தார். நிகழ்ச்சியின் தொகுப்பாளர் நடிகர் அஜித்குமாரிடம், ஹாலிவுட் நடிகர் பிராட் பிட் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'F1' என்ற கார் பந்தயத்தை மையப்படுத்திய திரைப்படம் வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், நீங்களும் கார் ரேஸை மையப்படுத்திய நடிப்பீர்களா? என அஜித்திடம் கேட்டார்.
அதற்கு நடிகர் அஜித்குமார், "உலகத் திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தால் தவறாமல் அதில் கலந்துகொள்வேன். FAST & FURIOUS போன்ற ஆக்ஷன் மற்றும் அதிரடி கதைக்களம் கொண்ட ஹாலிவுட் படங்களில் நடிப்பதற்கும் விருப்பம் உண்டு," என தனது எண்ணங்களை வெளிப்படுத்தியுள்ளார்.
அஜித்குமாரின் இத்தகைய கருத்து, ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் ஆச்சரியத்தையும், ஹாலிவுட் சினிமாவின் கவனத்தை ஈர்த்துள்ளதுள்ளதாக கூறப்படுகிறது.