சமூக வலைத்தளங்களில் பிரதமர் மோடி வெளியிட்ட பதிவில், "திரைப்பட உலகில் புகழ்மிக்க 50 ஆண்டுகளை நிறைவு செய்யும் ரஜினிகாந்த் அவர்களுக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது சினிமா பயணம் வரலாற்றுச் சிறப்புமிக்கது. மேலும், ரஜினியின் பல்வேறு கதாபாத்திரங்கள் பல தலைமுறைகளைக் கடந்து மக்கள் மனங்களில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. வரும் காலங்களிலும் அவரது வெற்றிக்கும், நல்ல ஆரோக்கியத்திற்கும் எனது வாழ்த்துக்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார். இந்தப் பதிவில், பிரதமர் மோடியும், ரஜினிகாந்தும் இணைந்து இருக்கும் புகைப்படம் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
திரைப்பட உலகில் புகழ்மிக்க 50 ஆண்டுகளை நிறைவு செய்யும் திரு ரஜினிகாந்த் அவர்களுக்கு வாழ்த்துகள். அவரது பயணம் வரலாற்றுச் சிறப்பு மிக்கது, அவரது நடிப்பில் பலவகையான பாத்திரங்கள் தலைமுறைகள் கடந்து மக்கள் மனங்களில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. வரும் காலங்களில் அவரது… pic.twitter.com/WUk1nl6Squ
— Narendra Modi (@narendramodi) August 15, 2025
74 வயதை எட்டிய பின்னரும், இந்திய சினிமாவின் மதிப்புமிக்க நடிகர்களில் ஒருவராகத் திகழ்ந்து வரும் ரஜினிகாந்த் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் ஆங்கிலம் எனப் பல்வேறு மொழிகளில் 171 படங்களில் நடித்திருக்கிறார்.
ரஜினிகாந்தின் பொன்விழா ஆண்டைக் கொண்டாடும் வகையில், ஆகஸ்ட் 14ஆம் தேதி, 'கூலி' திரைப்படம் வெளியானது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான இந்தப் படத்தில் ஸ்ருதி ஹாசன், சௌபின் சாஹிர், அக்கினேனி நாகார்ஜூனா, உபேந்திரா, அமீர்கான் மற்றும் சத்யராஜ் போன்ற பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்த இந்தப் படம் ரசிகர்களிடமிருந்து கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், முதல் நாளில் மட்டும் ரூ.151 கோடி வசூல் செய்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.