சினிமா

மதுரை மக்கள் ஒரு விஷயத்துல மாறவே மாட்டாங்க - விஷால் பேட்டி

மதுரை மக்கள் ஒரு விஷயத்துல மாறவே மாட்டாங்க என்று மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சாமி தரிசனம் செய்த பின் நடிகர் விஷால் மதுரை மக்களை புகழ்ந்து பேசினார்.

 மதுரை மக்கள் ஒரு விஷயத்துல மாறவே மாட்டாங்க - விஷால் பேட்டி
மதுரை மக்கள் ஒரு விஷயத்துல மாறவே மாட்டாங்க - விஷால் பேட்டி
நடிகர் விஷால் ரசிகர் மன்ற செங்கல்பட்டு மாவட்ட செயலாளர் சதீஷ்குமார் திருமணம் மதுரை திருமங்கலத்தில் நடைபெற்றது. அதில் பங்கேற்பதற்காக நடிகர் விஷால் மதுரை வருகை தந்த நிலையில், மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக வருகை தந்தார்.

செங்கல்பட்டு மாவட்ட செயலாளர் சதீஷ்குமார் திருமணத்திற்காக மதுரை வந்தேன், மதுரைக்கு வந்து மீனாட்சி அம்மன் கோவிலுக்கு போகாமல் எப்படி ஊருக்கு போக முடியும் எங்க அம்மா வீட்டுக்குள் சேர்க்க மாட்டாங்க. எங்கம்மா புடவை கொடுத்தாங்க அம்மனுக்கு கொடுத்து சாமி தரிசனம் செய்தேன். 2006இல் திமிரு பட சூட்டிங் போது வந்தேன் 19 வருஷம் கழிச்சு இப்ப வந்திருக்கிறேன். மனசார வேண்டிக் கொண்டதாக தெரிவித்தார்.

நடிகர் சங்க கட்டிடம் தாமதத்திற்கு காரணம் நான் இல்லை ஆறு மாதத்தில் முடிக்க வேண்டியதை நடிகர் சங்கம் தேர்தல் வைத்து எண்ணிக்கை என்ற பேரில் நீதிமன்றம் சென்றதால் 3 வருடம் தாமதம் ஆகிவிட்டது. இன்னும் நான்கு மாதத்தில் கட்டிடம் பெரிசாக வந்துவிடும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

என்னை விட்டு விட மாட்டார்கள் இயக்குனர்கள் நான் மதுரைக்காரன் "நானும் மதுரைக்காரன் தாண்டா” என்று வசனங்களை பேசி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.

இந்தியா பாகிஸ்தான் போர் தேவையில்லாதது. இதை தவிர்த்து இருக்கலாம், நம்மளை பாதுகாக்கும் ராணுவ வீரர்கள் உயிரிழக்கும் போது கஷ்டமாக இருக்கிறது.
எல்லா நாட்டிற்கும் எல்லைகள் போடப்பட்டுள்ளது அதை புரிந்து கொண்டு செயல்பட்டால் போரே தேவையில்லை. மதுரை மக்கள் ஒரு விஷயத்துல மாறவே மாட்டாங்க என்று பெருமையுடன் பேசினார்.

ஒன்று பாசம் மற்றொன்று உணவு இரண்டு விஷயத்தில் மாறவே மாட்டார்கள்.. நூறு வருஷம் கழிச்சு வந்தாலும் அதே பாசம் சிரிப்பு இருக்கும் என்றார்.