ஆரம்பத்தில் ரொமாண்டிக் பாயாக வலம் வந்த விஜய், மெல்ல மெல்ல ஆக்ஷன் ஹீரோவாக மாஸ் காட்டி, தற்போது தவெக தலைவராக கெத்து காட்டி வருகிறார். விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம், 2026 தேர்தலில் தவிர்க்க முடியாத அளவுக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என அரசியல் விமர்சகர்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். தவெக அறிமுகம் செய்யப்பட்டு சில பல நாட்கள் அமைதியாக இருந்த விஜய், இப்போது ஆக்டிவாக வலம் வருகிறார்.
இதிலும் கூட விஜய் பனையூர் பண்ணையார் போல, ஒர்க் ஃப்ரம் அரசியல் செய்வதாகவும், அவர் விடும் அறிக்கைகள் அவ்வளவு ஒர்த்தாக இல்லையென்றும் விமர்சனங்கள் வெளியாகின்றன. இதற்கெல்லாம் பதிலடி கொடுத்து வரும் தவெக தம்பிகள், “விஜய்ண்ணா கடைசிப் படமான ஜனநாயகனில் நடித்து வருகிறார். அந்தப் படத்தோட ஷூட்டிங் முடிஞ்சுதுன்னா, அப்புறம் இருக்கும் எங்க விஜய்ண்ணாவோட ஆட்டம்” என பட்டாசு கொளுத்தி வருகின்றனர்.
தவெக தொண்டர்கள் நினைப்பது போல, விஜய்யும் ஜனநாயகன் தான் எனது கடைசிப் படம், அப்புறம் எல்லாமே அரசியல் தான் என பஞ்ச் வைத்து பேசினார். அதன்படி H வினோத் இயக்கும் ஜனநாயகன் படத்தில், விஜய்யுடன் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, ப்ரியாமணி, பாபி தியோல் உட்பட பலரும் நடிக்க, அனிருத் இசையமைத்து வருகிறார். அக்டோபரில் படத்தை ரிலீஸ் செய்துவிட வேண்டும் என முடிவு செய்த படக்குழு, அதற்கேற்ப படப்பிடிப்பையும் வேகமாக நடத்தி வந்தது.
முதலில் இப்படம் அக்டோபரில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அடுத்தாண்டு தேர்தல் வருவதால், தவெக தம்பிகளுக்கு எனர்ஜி கொடுப்பதற்காக, ஜனநாயகன் ரிலீஸை தள்ளி வைத்துள்ளார் விஜய். அதன்படி, ஜனநாயகன், அடுத்தாண்டு தேர்தல் நெருக்கத்தில் பொங்கல் ஸ்பெஷலாக ஜனவரி 9ஆம் தேதி ரிலீஸாகிறது. இந்த நிலையில் சமீபத்தில் கூட இப்படத்திற்காக ஷூட்டிங்கிற்காக கொடைக்கானல் சென்று வந்தார் விஜய்.
படத்தின் ஷூட்டிங் பணிகள் கிட்டதட்ட நிறைவடைந்துவிட்டதாக கூறப்படுகிறது. இந்த படத்தை அறிவித்ததில் இருந்தே இப்படத்தின் கதை என்ன, விஜய்யின் கெட்டப் என்ன? என பல கேள்விகள் இருந்து வந்தது. இப்படத்திற்கு ஜனநாயகன் என பெயரிட்ட போதே கண்டிப்பாக இப்படம் முழுவதும் அரசியல் ரெஃபரன்ஸ் இருக்கும் என பேசப்பட்டது.
இந்த படத்தில் விஜய்யின் கதாபாத்திரத்திற்கு “தளபதி வெற்றி கொண்டான்” எனக் பெயரிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஜனநாயகன் குறித்த புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, பாலகிருஷ்ணா நடித்த பகவந்த் கேசரி படத்தின் ரீமேக் உரிமத்தை ஜனநாயகன் படக்குழு வாங்கியுள்ளதாக தகவல் வெளியானது.
அதுவும், படத்தை மொத்தமும் ரீமேக் செய்வதற்காக அல்ல, அந்த படத்தில் இடம்பெற்ற 'குட் டச் பேட் டச் காட்சியை போன்று ஜனநாயகள் படத்திலும் வைக்க உள்ளார்களாம் ரிவீஸின்போது பிரச்னை எதுவும் ஏற்படாதவாறு படத்தின் உரிமத்தையே வாங்கி, அந்த காட்சியை பயன்படுத்த உள்ளார்களாம்.
பகவந்த் கேசரி படத்தில், பள்ளி விழாவில் பங்கேற்கும் பாலகிருஷ்ணா, பெண் குழந்தைகளுக்கு குட் டச் பேட் டச் எது என்று சொல்லிக்கொடுப்பார். குழந்தைகளுக்கான விழிப்புணர்வு காட்சியான இது பலராலும் பாராட்டை பெற்றது. அதே பாணியில், ஜனநாயகன் படத்திலும் அந்த காட்சியை இடம்பெற செய்ய உள்ளனர். இதற்காகவே நான்கரை கோடி ரூபாய் கொடுத்து ரீமேக் உரிமம் வாங்கியுள்ளனர் என தகவல் வெளியானது.
இப்படி அப்டேட்டுக்கு மேல் அப்டேட் வெளியாகி வரும் நிலையில், தற்போது டாப் நடிகரான தனுஷ் ஜனநாயகன் படத்தில் காமியோ ரோலில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே கோட் படத்தில் காமியோ கொடுத்த சிவகார்த்திகேயனுக்கு துப்பாக்கியை கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தினார் விஜய், தற்போது ஜனநாயகனில் இணையவுள்ளதாக கூறப்படும் அந்த டாப் நடிகருக்கு கொடுக்கப்போகிறார் என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.