செப்பு பாத்திரங்கள் மெசபடோமியா காலத்திலிருந்து பயன்படுத்தப்படுகிறது. ஆரம்ப காலத்தில் ஈட்டி அம்புகள் போன்ற பொருட்களின் கூர்மையான உலோகங்களை செய்வதற்கு பயன்பட்டுள்ளது.
செப்பு பாத்திரங்கள் நாளடைவில் அணைத்து இடங்களிலும் பயன்படுத்தப் பட்டு வருகிறது செப்பு நச்சுத்தன்மையின் வீரியத்தை அதிகமாக கொண்டிருப்பதாக சமீபத்திய ஆய்வுகள் கூறுகின்றன. ஆரம்ப காலத்தில் செப்பு பாத்திரங்களில் தண்ணீர் அருந்துவது உடலுக்கு நன்மை அளிக்கிறது என்று கூறப்பட்ட நிலையும் சமீபத்திய ஆய்வு மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அசுத்தமான உணவு மற்றும் தண்ணீரின் மூலமாக அதிக அளவு தாமிரத்தை வெளிப்படுத்துவதால் செப்பு பாத்திரங்களில் நச்சுத்தன்மை அதிகரித்து காணப்படுகிறது. துருப்பிடித்த செப்பு சமையல் பாத்திரங்களில் பரிமாறப்படும் உணவுகளும் சமைக்கப்படும் உணவுகளும் அதிக அளவில் ரட்சத்தன்மையை உருவாக்கலாம் என்று ஆய்வில் கூறப்படுகிறது செப்பு பாத்திரங்களில் சாப்பிடும் முறை பழங்காலங்களில் அதிகமாக இருந்துள்ளது. நம்முடைய முன்னோர்கள் எப்ப பாத்திரங்களை தூய்மையாக கையாண்டு அதில் சமைத்து சாப்பிட்டு வந்தனர் ஆனால் தற்போதைய காலகட்டத்தில் செப்பு பாத்திரங்களை கையாளுவதற்கு நம்மில் பலருக்கு தெரிவதில்லை.
எப்ப பாத்திரங்களில் உள்ள நச்சுத்தன்மை அதிகரிப்பால் பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன உதாரணமாக வயிற்றுப்போக்கு வயிற்று வலி குமட்டல் வாந்தி தலைவலி மயக்கம் காய்ச்சல் உடல் சோர்வு அதிக குளிர் தசை வலி தண்ணீர் தாகம் சுவைத்தன்மை மாறுபாடு சிறுநீரகம் மற்றும் கல்லீரல் செயல் இழப்பு போன்றவை அதிக அளவில் ஏற்படுகிறது.
இவ்வாறான நோய்களிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கு செப்பு பாத்திரங்களை தூய்மையாக பராமரிப்பது சிறந்த வழியாக கூறப்படுகிறது என்றால் முறையாக சுத்தம் செய்து அதிலிருந்து உட்கொள்ளப்படும் தாமிரம் மிக குறைவாகவே இருக்கும் எனவே மிக சரியான முறையில் கையாள்வது இதிலிருந்து நமது உடலை பாதுகாப்பதற்கான வழியாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
செப்பு பாத்திரங்களில் ஏற்படும் நிற மாற்றம் மிகவும் அபாயமானது எனது நிறமாற்றம் அடைந்த பாத்திரத்தை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்
ஊறுகாய் தயிர் அல்லது தக்காளி குழம்பு போன்ற அமில உணவுகளை செப்பு பாத்திரங்களில் வைத்து சமைப்பது அறவே கூடாது
செப்பு பாத்திரங்களை அன்றாட உணவுக்கு தினமும் பயன்படுத்துவதை தவிர்த்து எப்போதாவது உபயோகப்படுத்துவதே சிறப்பானதாக அமையும்
செப்பு பாத்திரங்களை மிகவும் தூய்மையாக கையாள்வதன் மூலம் மட்டுமே பல்வேறு நன்மைகள் கிடைக்கப்படும் செப்பு பாத்திரங்களை தூய்மையாக்கும் வழிகள் குறித்து காணலாம்.
செப்பு பாத்திரங்களை புளியைக் கொண்டு கழுவுவது சிறப்பானதாக அமையும். புளி காய்கள் அல்லது பேஸ்ட் வடிவில் ஆன பொருட்களைக் கொண்டு செப்பு பாத்திரங்களை 10 முதல் 15 நிமிடங்கள் வரை ஊற வைத்து சுத்தமான தண்ணீரில் தேய்த்து கழுவினால் பளபளப்பாக இருக்கும். இவ்வாறு செய்வதனால் அதிலுள்ள அதிகப்படியான காப்பர் வெளியேறி உடலுக்கு நன்மை பயக்கும்.