ஐதராபாத்தில் உள்ள ஐடி நிறுவன ஊழியர்களில் 84% பேருக்கு கொழுப்பு நிறைந்த கல்லீரல் நோய் (ஃபேட்டி லிவர்) இருப்பதாக ஓர் ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்தத் தகவலை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா, மக்களவையில் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை 21 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், கடந்த 1 ஆம் தேதி மக்களவையில் பேசிய ஐதராபாத் எம்.பி. அசாதுதீன் ஓவைசி, “சமீபத்திய ஆய்வில், ஐதராபாத்தில் பணிபுரியும் ஐ.டி. ஊழியர்களில் 84% பேருக்கு கொழுப்பு கல்லீரல் நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆய்வு மத்திய அரசின் கவனத்துக்கு வந்ததா? அப்படியெனில் இதற்காக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் என்ன துன்று அவர் கேள்வி எழுப்பினார்.
எம்.பி. அசாதுதீன் ஓவைசி எழுப்பிய கேள்விக்கு எழுத்துப்பூர்வமாகப் பதிலளித்த மத்திய அமைச்சர் நட்டா, "345 ஐடி ஊழியர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில், 84% பேருக்குக் கொழுப்பு கல்லீரல் நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆய்வின்படி ஐடி ஊழியர்களிடையே கொழுப்பு கல்லீரல் அதிகரித்திருப்பதை காட்டுகிறது.
இந்தப் பிரச்சனையைச் சமாளிக்க, மத்திய அரசு சில முக்கிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது. தொற்றா நோய்களைத் தடுப்பதற்கான தேசிய திட்டத்தின் கீழ், ஆல்கஹால் அல்லாத கொழுப்பு கல்லீரல் நோய்க்கான (NAFLD) வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இந்த வழிகாட்டுதல்களின்படி, ஆரோக்கியமான உணவு, வழக்கமான உடற்பயிற்சி, உடல் எடையைக் குறைப்பது, மற்றும் சர்க்கரை மற்றும் நிறைவுற்ற கொழுப்பு உணவுகளைக் குறைப்பது போன்றவற்றை அரசு வலியுறுத்துகிறது. மேலும், இந்த வழிகாட்டுதல்களின்படி ஊழியர்களுக்குப் பரிசோதனை செய்யவும், நோய் அபாயம் உள்ளவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்கவும் மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்று அவர் தெரிவித்தார்.
கொழுப்பு கல்லீரல் என்றால் என்ன?
கொழுப்பு கல்லீரல் என்பது, ஒரு நபரின் கல்லீரலில் தேவைக்கு மேல் கொழுப்பு சேர்ந்து கல்லீரல் செயல்பாட்டை பாதிக்கும் ஒரு நிலையாகும். உடல் பருமன், குறிப்பாக வயிற்றுப் பகுதியில் கொழுப்பு, இன்சுலின் எதிர்ப்பு, அதிக இரத்த சர்க்கரை, உயர் இரத்த அழுத்தம் மற்றும் அதிக கொழுப்பு ஆகியவை இந்த நோய்க்கான முக்கிய ஆபத்து காரணிகளாக கருதப்படுகிறது.
கொழுப்பு கல்லீரல் அறிகுறிகள்
கொழுப்பு கல்லீரல் நோயின் ஆரம்ப கட்டத்தில் தெளிவான அறிகுறிகள் தெரியாது. அதனால் இந்த நோயை கண்டறிவதில் கடினமாக உள்ளது. ஆனால் சில நுட்பமான அறிகுறிகள் மூலம் இந்த நோயை கண்டறிய முடியும். அதாவது, ஓய்வெடுத்த பிறகும் சோர்வாக உணர்வது, அடிவயிற்றின் மேற்புறத்தில் (வலதுபுறம்) ஒருவித வீக்கம் இருப்பது போன்ற உணர்வு, விலா எலும்புகளுக்கு அடியில் லேசான வலி, காரணமில்லாமல் ஏற்படும் பலவீனம் அல்லது செரிமானக் கோளாறு ஏற்படுவது போன்ற சில அறிகுறிகள் மூலம் கண்டறிய முடியும்.
சில சமயங்களில், வழக்கமான உடல் பரிசோதனையின் போது கொழுப்பு கல்லீரல் நோய் கண்டறிய முடியும். கல்லீரல் செயல்பாடு சோதனைகள் போன்றவை அல்லது அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் மூலம் கல்லீரலில் கொழுப்பு படிந்திருப்பதை ஆரம்பத்திலேயே கண்டறியலாம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
வாழ்க்கை முறை மாற்றங்கள்
இந்த நோய் ஆரம்ப நிலையில் இருந்தபோதே கண்டறியப்பட்டால், உணவுப் பழக்கங்களில் மாற்றம் மற்றும் வாழ்க்கை முறை திருத்தங்கள் மூலம் குணப்படுத்தலாம். ஆனால் கவனிக்காமல் விட்டால் இது புற்றுநோயாக மாறும் அபாயம் உள்ளது என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
உணவுப் பழங்கங்களில் மாற்றம்
கொழுப்பு கல்லீரல் நோயை ஆரம்பகட்டத்தில் குணப்படுத்த எண்ணெய், கார்போஹைட்ரேட் மற்றும் சர்க்கரை குறைக்க வேண்டும். அதேபோல், அதிக நார்ச்சத்து மற்றும் புரதச்சத்து நிறைந்த உணவுகளை சேர்க்க வேண்டும். மேலும், துரித உணவுகளை அடிக்கடி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
முறையான உடற்பயிற்சி மற்றும் தூக்கம்
தினமும் குறைந்தது 30 நிமிடம் நடைபயிற்சி செய்வது இந்த நோயின் தீவிரத்தை கட்டுப்படுத்த முடியும். கட்டாயம் வாரத்தில் 5 நாட்கள் உடற்பயிற்சி வேண்டும். தினமும் குறைந்தது 7-8 மணி நேரம் தூங்க வேண்டும். தூக்கக்குறைவால் ஹார்மோன்களில் மாற்றம் ஏற்பட்டு, உடல் எடை அதிகரிக்கும். உடல் எடை அதிகரிப்பது, நோயின் ஆபாயத்தை அதிகரிக்க கூடும் என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.