பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தைலாப்புரம் வீட்டில் தனது தொலைபேசி ஹேக் செய்யப்பட்டதாகவும், இது தொடர்பாக கோட்டக்குப்பம் டி.எஸ்.பி அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் காவல் துறையினர் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தைலாபுரம் இல்லத்தில் ஒட்டுக் கேட்கும் கருவி சர்ச்சை
இந்த விவகாரம்குறித்து ஒருபக்கம் விசாரணைகள் நடந்துக்கொண்டிருக்க, கடந்த சில வாரங்களுக்கு முன்பு ராமதாஸின் தைலாபுரம் இல்லத்தில், அவர் அமர்ந்திருக்கும் நாற்காலிக்கு அருகே ஒட்டுக் கேட்கும் கருவி கண்டெடுக்கப்பட்டது. இது லண்டனிலிருந்து கொண்டு வரப்பட்ட மிகவும் விலை உயர்ந்த கருவி எனவும், இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து ஜூலை 17, 2025 அன்று, சென்னையைச் சேர்ந்த ஒரு தனியார் உளவு நிறுவனத்தின் எட்டு ஊழியர்கள் தைலாபுரம் இல்லத்தில் ஆய்வு செய்து, அந்த ஒட்டுக் கேட்கும் கருவியை எடுத்துச் சென்றனர். இந்தச் சம்பவத்தை அடுத்து, இரண்டு நாட்களுக்கு முன்பு, தைலாபுரம் இல்லத்தில் ஒட்டுக் கேட்கும் கருவியை வைத்தது அன்புமணி ராமதாஸ்தானென ராமதாஸ் பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார். மேலும், "தந்தையை மிஞ்சிய மகன்" என்றும் பரபரப்பாகப் பேட்டி அளித்தார்.
ராமதாஸ் - அன்புமணி மோதல்
பா.ம.க.வில் தந்தை ராமதாஸ் மற்றும் மகன் அன்புமணி ராமதாஸ் இடையே சில மாதங்களாகவே மோதல் போக்கு நிலவி வருகிறது. இது கட்சித் தொண்டர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது. தற்போது இருவரும் தனித்தனியாகக் கட்சியின் செயல்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்தச் சூழலில், (ஆகஸ்ட் 9) அன்று அன்புமணி ராமதாஸ் தலைமையில் பொதுக்குழு கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து (ஆகஸ்ட்17) அன்று கட்சி நிறுவனர் ராமதாஸ் தலைமையில் ஒரு சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெறவிருக்கிறது. இரண்டு தரப்பிலும் பொதுக்குழு கூட்டங்கள் நடத்தப்படுவதால் கட்சிக்குள் குழப்பம் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், தற்போது ராமதாஸின் தொலைபேசி ஹேக் செய்யப்பட்டது குறித்து புகார் அளிக்கப்பட்டுள்ளது. ராமதாஸின் நேர்முக உதவியாளர் அளித்த இந்தப் புகாரில், wi-fi மூலம் அவரது தொலைபேசி ஹேக் செய்யப்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரியுள்ளார். இந்தத் தொடர்ச்சியான நிகழ்வுகள் பா.ம.க.வில் பரபரப்பை அதிகரித்துள்ளன.