K U M U D A M   N E W S
Promotional Banner

புகார்

கடன் பெற்று தருவதாக ரூ.23 லட்சம் மோசடி – நோட்டீஸ் வந்ததால் பாதிக்கப்பட்டவர் அதிர்ச்சி

தேனியில் 5 லட்சம் ரூபாய் கடன் பெற்று தருவதாகக் கூறி ஆதார், பான் கார்டு, செல்போன் ஒடிபி உள்ளிட்ட விவரங்களைப் பெற்று 23 லட்சம் ரூபாய் மோசடி

பா.ம.க நிறுவனர் ராமதாஸின் தொலைபேசி ஹேக் செய்யப்பட்டதாகப் புகார்.. காவல்துறையினர் விசாரணை!

பாட்டாளி மக்கள் கட்சியின் (பா.ம.க) நிறுவனர் ராமதாஸின் தொலைபேசி சட்டவிரோதமாக ஹேக் செய்யப்பட்டதாகக் கூறி, கோட்டக்குப்பம் டி.எஸ்.பி அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. இந்தப் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பட்டப்பகலில் ரயில் நிலையத்தில் பெண்ணிடம் கைவரிசை காட்டிய இளைஞர்...ரயில்வே போலீசார் அதிரடி நடவடிக்கை

தான் மீன் வியாபாரம் செய்வதாகவும், மனைவியை பிரிந்த தனியாக இருப்பதால் தன்னுடன் வருமாறு பெண்ணிடம் பேச்சு கொடுத்து கைவரிசை கட்டியதாக போலீசில் கூறியுள்ளார்.

திருமணத்தை மீறிய உறவில் முதலிடம்- தவறான டேட்டா வெளியிட்டதாக டேட்டிங் ஆப் மீது புகார்

இந்தியாவிலேயே காஞ்சிபுரம் தான் திருமணத்திற்கு மீறிய உறவில் முதலிடம் பிடித்தது என்று தனியார் செயலி சமூக வலைத்தளங்களில் டேட்டா வெளியிட்டது

17 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய ஊர் நாட்டமையின் மகன் – தர்ணாவில் ஈடுபட்ட தாய்

காவல் நிலையத்தில் புகரளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி பாதிக்கபட்ட சிறுமி மற்றும் தாய் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு

மல்லை சத்யா மீது அவதூறு வழக்கு – மதிமுக வழக்கறிஞர்கள் டிஜிபி அலுவலகத்தில் புகார்!

மதிமுக கட்சி, கட்சி தலைவர், கட்சி கொடி ஆகியவற்றிற்கு அவமானத்தை ஏற்படுத்தியதாக கூறி மல்லை சத்யா உள்ளிட்ட நான்கு பேர் மீது மதிமுக வழக்கறிஞர்கள் பிரிவினர் காவல்துறை டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.

வேலை வாங்கி தருவதாக ரூ.1 லட்சம் மோசடி – பாஜக நிர்வாகி மீது வழக்கு

மதுரை விமான நிலையத்தில் வேலை வாங்கி தருவதாக ரூ.1 லட்சம் மோசடி செய்ததாக பாஜக மகளிர் அணி மாவட்ட செயலாளர் மீது வழக்கு

நேர்மைக்கு கிடைத்த பரிசு.. சஸ்பெண்ட் குறித்து DSP சுந்தரேசன் கருத்து!

கார் மறுக்கப்பட்டதாக புகார் அளித்த மயிலாடுதுறை டிஎஸ்பி சுந்தரேசனை சஸ்பெண்ட் செய்து எஸ்.பி. உத்தரவிட்ட நிலையில், நேர்மைக்கு கிடைத்த பரிசு என சஸ்பெண்ட் குறித்து DSP சுந்தரேசன் கருத்து தெரிவித்துள்ளார்.

நடிகர் நிவின் பாலி மீது மோசடி வழக்குப்பதிவு – தயாரிப்பாளர் புகார்!

2022ல் வெளியான 'மஹாவீர்யார்' படத்தின் தயாரிப்பாளரின் புகாரில், நடிகர் நிவின் பாலி இயக்குநர் அப்ரித் ஷைன் மீது மோசடி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

புகார் மீது நடவடிக்கை இல்லை என குற்றச்சாட்டு-துணை ஆணையரை விடுவித்து உத்தரவு

கோயம்பேடு துணை ஆணையர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு சென்னை ஆணையரகத்திற்கு மாற்றி சென்னை காவல் ஆணையர் அருண் உத்தரவு

பொய் புகார் கொடுத்த நர்ஸ்.. எச்சரித்து ஜாமீனில் விடுவித்த போலீஸ்!

தனியாக நடந்து சென்ற போது பைக்கில் வந்த கும்பல் தங்க நகையை பறித்ததாக பொய் புகார் அளித்த நர்ஸை போலீசார் கைது செய்து எச்சரித்து ஜாமீனில் விடுவித்தனர்.

நிகிதா மீது சென்னையில் மோசடி புகார்...போலீஸ் விசாரணை

அஜித்குமார் கொலை வழக்கில், நகை காணாமல் போனதாக புகார் கொடுத்த நிகிதா மீது சென்னையிலும் மோசடி புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

கண்ணியத்தோடு நடந்துகொள்ளுங்கள்.. காவல்துறைக்கு முதல்வர் அறிவுரை

“கஞ்சா, கள்ளச்சாராய வழக்குகளில் கைது செய்யப்படும் குற்றவாளிகளுக்கு விரைந்து தண்டனை பெற்றுத்தர தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என்று முதல்வர் ஸ்டாலின் காவல்துறையினருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

ஆந்திராவில் கோயில் லட்டுவில் ‘கரப்பான் பூச்சி’ என புகார்...பக்தர்கள் அதிர்ச்சி

பக்தர் அளித்த புகார் கடிதத்தில், ஊழியர்கள் அலட்சியமான லட்டுகள் தயாரித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்

என்னடா ஒரே பித்தலாட்டமா இருக்கு.. செல்போன் ஆர்டர் செய்தவருக்கு சென்ட் பாட்டில் டெலிவரி

அமேசானில் செல்போன் ஆர்டர் செய்த நிலையில் சென்ட் பாட்டில் டெலிவரி செய்யப்பட்டுள்ளது. அதனை மாற்றி கொடுக்காமல் ஏமாற்றியதாக அமேசான் நிறுவனம் மீது டிஜிபி அலுவலகத்தில் ஒருவர் புகார் அளித்துள்ளார்.

காதல் ஆசை காட்டிய துணை நடிகை.. லட்சங்களை இழந்த ஐடி வாலிபர்

காதலித்து திருமணம் செய்து கொள்வதாக கூறி லட்சக்கணக்கில் பணம் மோசடி செய்ததாக துணை நடிகை மீது காதலன் காவல்துறை டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

இன்ஸ்டாகிராமில் குறைந்த ஃபாலோவர்ஸ்.. கணவன் மீது போலீசில் புகார் அளித்த மனைவி

உத்தரப்பிரதேசத்தில் தனது கணவன் வீட்டு வேலை செய்ய வற்புறுத்தியதாகவும், அதனால் இன்ஸ்டாகிராமில் ஃபாலோவர்ஸ் எண்ணிக்கை குறைந்ததாகவும் மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

வீட்டை விற்று பணம் கொடுத்தேன்.. தயாரிப்பாளர் கண்ணீர்

நடிகர் மயில்சாமி மகனை வைத்து திரைப்படம் எடுத்து தருவதாக கூறி ரூ. 33 லட்சம் மோசடி செய்ததாக இயக்குநர் உள்ளிட்ட 4 பேர் மீது தயாரிப்பாளர் செல்வம் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

பாடலாசிரியருக்கு நேர்ந்த விபரீதம்.. தரக்குறைவாக பேசிய தயாரிப்பாளர்.. போலீசில் புகார்!

தேசிய விருது பெற்ற பாடலாசியர் பா.விஜய்க்கு பாடல் எழுதுவதற்கு அட்வான்ஸ் கொடுத்துவிட்டு, ஒன்றரை வருடம் கழித்து, அவரை தரக்குறைவாக பேசி பணத்தை திருப்பி கேட்ட பெண் தயாரிப்பாளர் மீது கொடுங்கையூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது

போலி ஆபாச வீடியோ: சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்த நடிகை கிரண்!

பிரபல நடிகை கிரண் போலி ஆபாச வீடியோ வெளியானது குறித்து சைபர் கிரைம் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

தெய்வசெயல் மீதான புகார்.. ஆளுநரை காண ராஜ்பவன் வந்த இளம்பெண்ணால் பரபரப்பு

திமுக முன்னாள் நிர்வாகியான தெய்வசெயல் மீது அளித்த பாலியல் வன்கொடுமை புகாரை சிபிஐக்கு மாற்ற வேண்டி ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் முறையிடுவதற்காக உரிய அனுமதியின்றி ராஜ்பவன் சென்ற இளம்பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.

இசையமைப்பாளர் சாம் C.S மீது தயாரிப்பாளர் பரபரப்பு புகார்

சினிமா தயாரிப்பாளர் சமீர் அலிகான் என்பவர் பிரபல மியூசிக் டைரக்டர் மற்றும் பாடகரான சாம் C.S என்பவர் மீது புகார் அளித்துள்ளார்.

திமுக நிர்வாகி மீது கல்லூரி மீதான புகார்.. ராணிப்பேட்டை எஸ்.பி. அலுவலகம் விளக்கம்!

திமுக நிர்வாகி தெய்வசெயல் ஏமாற்றி திருமணம் செய்ததாக கல்லூரி மாணவி புகார் அளித்த வழக்கில், புகார் மீது காவல்துறை அலட்சியம் காட்டுவதாக கல்லூரி மாணவி குற்றச்சாட்டிய வழக்கில், ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இருந்து இந்த வழக்கு தொடர்பாக விளக்க அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

ரவுடி பேபி சூர்யா, சிக்கந்தரை கைது செய்ய வேண்டும்...யூடியூபர் திருச்சி சாதனா கண்ணீர் மல்க புகார்

தனது மகள்கள் மற்றும் கணவர் குறித்து அருவருக்கதக்க வகையில் வீடியோ வெளியிடும் சூர்யா மற்றும் சிக்கந்தர் மீது நடவடிக்கைகள் எடுக்க கோரி யூடியூபர் திருச்சி சாதனா கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்து விட்டு கண்ணீர் மல்க பேட்டி

ஓசூரில் கோயில் பிரசாதத்தில் பாம்பு....பக்தர்கள் அதிர்ச்சி

பிரசித்தி பெற்ற சந்திர சூடேஸ்வரர் மலைக்கோவிலில் பக்தர்கள் வாங்கிய பிரசாதத்தில் குட்டி பாம்பு உயிரிழந்து கிடந்ததால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.