K U M U D A M   N E W S
Promotional Banner

விசாரணை

பைக்கை வேகமாக ஓட்டியதை தட்டிக்கேட்டதால் ஆத்திரம்...இருவருக்கு அரிவாள் வெட்டு..வீடியோ வெளியாகி அதிர்ச்சி

இளைஞர்கள் இரண்டு நபர்களை வெட்டிவிட்டு கத்தியுடன் தப்பித்து செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.

பா.ம.க நிறுவனர் ராமதாஸின் தொலைபேசி ஹேக் செய்யப்பட்டதாகப் புகார்.. காவல்துறையினர் விசாரணை!

பாட்டாளி மக்கள் கட்சியின் (பா.ம.க) நிறுவனர் ராமதாஸின் தொலைபேசி சட்டவிரோதமாக ஹேக் செய்யப்பட்டதாகக் கூறி, கோட்டக்குப்பம் டி.எஸ்.பி அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. இந்தப் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதிகாரத் திமிர் தான் திமுக ஆட்சியின் கேடு- அன்புமணி

திமுகவில் உறுப்பினராகி விட்டால் கொலை செய்வதற்கான உரிமமும் வழங்கப்பட்டு விடுமா? என்பது தெரியவில்லை” என்று அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இளைஞர் மீது காரை ஏற்றி கொலை செய்த விவகாரம்: மேலும் ஒருவர் கைது

அண்ணா நகரில் காதல் விவகாரத்தில் இளைஞரை காரை ஏற்றி கொலை செய்த சம்பவத்தில் அரசியல் பிரமுகரின் பேரன் உள்பட 3 பேர் கைது

கார் ஏற்றி கல்லூரி மாணவர் கொலை.. திமுக கவுன்சிலர் பேரன் உட்பட 4 பேர் மீது வழக்கு!

சென்னையில் சொகுசு கார் மோதி கல்லூரி மாணவர் உயிரிழந்த விவகாரத்தில், திமுக கவுன்சிலர் பேரன் உள்ளிட்ட 4 மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.

காதல் விவகாரச் சண்டையில் நீதிமன்ற ஊழியர் குத்திக்கொலை ..குற்றவாளி தப்பி ஓட்டம்!

திருவாரூரில் காதல் தொடர்பான சண்டையை விலக்கச் சென்ற நீதிமன்ற அலுவலக ஊழியர் கத்தியால் குத்தப்பட்டு பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளி தப்பி ஓடிய நிலையில், உடன் இருந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பேருந்தில் நடத்துனரை சரமாரியாக தாக்கிய கும்பல்- சிசிடிவி காட்சி வைரல்

கல்லூரி மாணவியின் கணவன் சம்பவம் நடைபெற்ற மறுநாள் தனது நண்பர்களோடு பேருந்தில் ஏறி நடத்துனரை சரமாரியாக தாக்கியுள்ளார்

சென்னையில் கார் மோதி மாணவர் உயிரிழப்பு- கொலையா? என விசாரணை

மாணவன் மீது திட்டமிட்டு விபத்து ஏற்படுத்தி கொலை செய்யப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு

மீண்டும் மீண்டும் காரை ஏற்றிய கொடூரன்…ஜம்மு காஷ்மீர் சம்பவத்தால் அதிர்ச்சி

காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான இளைஞரை தேடி வருகின்றனர்

“வேற மாதிரி தொழில் செஞ்சதால கொன்னேன்”-அழுகிய நிலையில் பெண் உடல் மீட்கப்பட்ட வழக்கில் கள்ளக்காதலன் பரபரப்பு வாக்குமூலம்

பாலியல் தொழிலாளி என்பதை மறைத்ததால் கள்ளக்காதலன் வெறிச்செயல்

திட்டமிட்டு கணவரை தீர்த்துக்கட்டிய மனைவி...கள்ளக்காதலனை காட்டிக்கொடுத்த 3 வயது மகள்

கொலை செய்த தடையங்களை அழித்துவிட்டு ஒன்றும் தெரியாதது போல், கூட்டத்தோடு கூட்டமாக நின்றிருந்த கொலையாளி

மும்பையில் திரிஷ்யம் பட பாணியில் கொலை...கள்ளக்காதலனுடன் மனைவி செய்த சம்பவத்தால் பரபரப்பு

வீட்டின் கீழ் புதைக்கப்பட்டிருந்த ஒரு கருப்பு பிளாஸ்டிக் பையில் அழுகிய உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

மனைவி, மகள் கண்முன்னே கணவருக்கு நேர்ந்த கொடூரம்...கடைக்கு சென்று திரும்பியபோது நடந்த அதிர்ச்சி சம்பவம்

மனைவி, மகள் கண்முன்னே கணவர் வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட சம்பவ இடத்தில் எஸ்பி நேரில் விசாரணை மேற்கொண்டார்.

காட்பாடியில் வீடுகள் மீது பெட்ரோல் குண்டு வீசிய இருவர் கைது...வெளியான அதிர்ச்சி பின்னணி

புகார் அளித்த 24 மணி நேரத்துக்குள் அதிரடி காட்டிய பிரம்மபுரம் போலீசார்

மக்கள் நீதி மய்யம் பெண் நிர்வாகி மீது தாக்குதல் நடத்திய ஆட்டோ ஓட்டுநர்.. காவல்துறையினர் விசாரணை!

கூகுள் மேப்பை ஆப் செய்துவிட்டு, வேறு பாதையில் ஆட்டோ ஓட்டுநருக்கும், பெண் நிர்வாகிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறிய நிலையில், மக்கள் நீதி மய்யம் பெண் நிர்வாகி மற்றும் ஆட்டோ ஓட்டுனர் மாறி மாறித் தாக்கிக் கொண்ட வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

இலங்கையில் கண்டெடுக்கப்பட்ட 65 சிறுமிகளின் எலும்புகள்...செம்மணியில் மீண்டும் பரபரப்பு

செம்மணி பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ள 65 சிறுமிகளின் எலும்புகளுடன் பள்ளிப் பைகள் மற்றும் பொம்மைகள் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி பொறுப்பேற்பு...மூதாட்டி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு

திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி-யாக பதவி ஏற்ற சில மணி நேரத்திலேயே மூதாட்டி தீக்குளிக்க முயன்றதால் எஸ்.பி அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

RCB வெற்றிக்கொண்டாட்ட விவகாரம்: கர்நாடக கிரிக்கெட் வாரியத்திற்கு சிக்கல்!

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி சமீபத்தில் நடத்திய வெற்றிப் பேரணி பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. முறையான திட்டமிடல் இல்லாமல் பேரணிக்கு ஏற்பாடு செய்ததன் விளைவாக ஏற்பட்ட அசம்பாவிதங்கள் மற்றும் பாதுகாப்பு குறைபாடுகள்குறித்து கர்நாடக அரசு தீவிர விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

குடும்ப பிரச்சனை: மனைவியை அடித்துக் கொன்ற கணவர் கைது!

குடும்ப பிரச்சனையில் மனைவியைக் கையால் அடித்துக் கொலை செய்த கணவரைப் போலீசார் காவல் நிலையத்தில் கைது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாற்காலியால் வந்த பிரச்சனை கொலையில் முடிந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

அரசு சொத்தை ஆக்கிரமிக்க முயற்சி- பொதுமக்கள் சுற்றி வளைத்ததால் ஓட்டம் பிடித்த திமுக பிரமுகர்

மாநகராட்சிக்கு சொந்தமான இடம் ஆக்கிரமிப்பு செய்ய வந்த தி.மு.கவை சேர்ந்த நபரை பொதுமக்கள் சுற்றி வளைத்ததால் அங்கு இருந்து ஓட்டம் பிடித்து உள்ளார்.

காதலனுடன் சென்ற இளம்பெண் - காரை மறித்து பாசப்போராட்டம் நடத்திய பெற்றோர்

பெற்ற மகளை தன்னுடன் அனுப்ப வேண்டும் எனக் கூறி கார் செல்லவிடாமல் குறுக்கே படுத்துக்கொண்டு ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பெற்றோர்களின் பாச போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.

மணல் கடத்தலை தட்டிக்கேட்டவருக்கு மண்வெட்டியால் வெட்டு - 3 பேர் கைது

மணல் கடத்தலை தட்டி கேட்ட நில உரிமையாளரை மண்வெட்டியால் வெட்டப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதிமுகவில் கோஷ்டி மோதல்-ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட வீடியோ வைரல்

ராசிபுரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வந்த அதிமுகவினரிடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டது.

75 வயது மாமியாரிடம் அத்துமீறிய மருமகன்-கோவையில் நடந்தேறிய அதிர்ச்சி சம்பவம்

75 வயது மாமியாரை மருமகன் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கோவையில் போதை மாத்திரைகள் விற்பனை- நாகாலாந்து இளைஞர் கைது

போதை மாத்திரைகளை விற்பனை செய்த நாகாலாந்து இளைஞரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.