சட்டவிரோத ஆன்லைன் சூதாட்ட தளங்கல் தொடர்பாக, அமலாக்கத்துறை அதிகாரிகள் இந்த வழக்கை தீவிரமாக விசாரித்து வருகின்றனர். நடிகர்கள் பிரகாஷ் ராஜ், விஜய் தேவரகொண்டா, மஞ்சு லட்சுமி உள்ளிட்ட பல திரை மற்றும் தொலைக்காட்சி பிரபலங்களுக்கு ஏற்கனவே சம்மன் அனுப்பப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்டத்தின் (PMLA) கீழ் அமலாக்கத்துறை முதல் தகவல் அறிக்கையை (ECIR) பதிவு செய்தது. அதில் நடிகர்கள், தொலைக்காட்சி பிரபலங்கள், யூடியூப் சேனல் நடத்துபவர்கள் மற்றும் சமூக வலைதளங்களில் பிரபலமானவர்கள் உட்பட 29 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பஞ்சகுட்டா, மியாபூர், சூர்யாபேட்டை மற்றும் விசாகப்பட்டினம் ஆகிய இடங்களில் பதிவு செய்யப்பட்ட ஐந்து முதல் தகவல் அறிக்கைகளின் அடிப்படையில் இந்த வழக்கு விசாரிக்கப்படுகிறது. 1867-ஆம் ஆண்டின் பொது சூதாட்ட சட்டத்தை மீறியதாக இவர்கள் மீது சந்தேகம் எழுந்துள்ளது.
ஜங்லீ ரம்மி, ஏ23, ஜீத்வின், பரிமேட்ச் மற்றும் லோட்டஸ் 365 போன்ற சூதாட்ட தளங்களை பிரபலங்கள் விளம்பரப்படுத்துவதற்காக, கணிசமான தொகையை பெற்றதாகவும் அமலாக்கத்துறை சந்தேகம் தெரிவிக்கின்றனர். பொழுதுபோக்கு அல்லது அறக்கட்டளை சார்ந்த நிகழ்ச்சிகள் என்ற பெயரில், இந்த விளம்பரங்கள் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டதாகவும், இதன் மூலம் அங்கீகரிக்கப்படாத சூதாட்ட தளங்களுக்கு பயனாளர்களை ஈர்க்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் கூறப்படுகிறது. யூடியூப் சேனல் ஒன்றில் வந்த விளம்பரத்தை நம்பி 3 கோடி ரூபாய்க்கு மேல் நஷ்டம் ஏற்பட்டதாக ஒருவர் புகார் அளித்துள்ளார்.
நடிகர்களை தொடர்ந்து, நடிகைகள் பிரணிதா, நிதி அகர்வால், அனன்யா நாகெல்லா, சிரி ஹனுமந்து, வர்ஷினி சௌந்தரராஜன், வசந்தி கிருஷ்ணன் மற்றும் ஷோபா ஷெட்டி ஆகியோரும் இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் என ECIR-ல் குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்கள் மீது, அங்கீகரிக்கப்படாத சூதாட்ட தளங்களுக்கு பயனாளர்களை திசை திருப்பும் நோக்கத்துடன், திட்டமிட்டே இந்த விளம்பரங்கள் செய்யப்பட்டதா என்ற கோணத்தில் அமலாக்கத்துறை தற்போது விசாரணை நடத்தி வருகிறது.
இந்த வழக்கில் தற்போது தெலுங்கு நடிகர் ராணா டகுபதி நேரில் ஆஜராகவேண்டும் என்று அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. அந்த சம்மனில் ஆகஸ்ட் 11-ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு அவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. முன்னதாக, ஜூலை 23-ஆம் தேதி ஆஜராகுமாறு முதலில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கில் மேலும் பலருக்கு சம்மன் அனுப்பப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சினிமா நட்சத்திரங்கள் விளம்பரங்களில் நடிப்பதில் தவறில்லை என்றாலும், அது பொதுமக்களுக்கு தீங்கு விளைவிக்கும் செயலாக இருக்கக் கூடாது. சூதாட்டத்தின் ஆபத்தை உணராமல், விளம்பரங்களை நம்பி பணத்தை இழக்கும் அப்பாவி மக்களின் நிலை கவலை அளிக்கிறது. திரைத்துறையினர் இதுபோன்ற விளம்பரங்களில் ஈடுபடும் முன், அதன் நன்மை தீமைகளை ஆராய்ந்து செயல்பட வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.