இந்திய குடியரசுத் துணைத் தலைவராக பதவிவகித்த ஜெகதீப் தன்கர் தனது உடல்நலக் காரணங்களை மேற்கோள் காட்டி கடந்த ஜூலை 21ம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார். . அவருடைய ராஜினாமாவை ஜனாதிபதி திரௌபதி முர்மு ஏற்றுக் கொண்டதையடுத்து, குடியரசுத் துணைத் தலைவர் பதவி காலியாகியுள்ளது.
இந்த நிலைமையில், இந்திய தேர்தல் ஆணையம் விரைவில் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது. தேர்தல் தொடர்பான வேலைத்திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. Article 68(2) படி, இந்திய குடியரசு துணைத்தலைவர் பதவி காலியாகும் நேரத்திலிருந்து 60 நாட்களுக்குள் தேர்தல் நடைபெற வேண்டும் என்பதால், வரும் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தில் தேர்தல் நடைபெறும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
துணைத் தலைவர் தேர்தலில் மொத்தமாக 788 பாராளுமன்ற உறுப்பினர்கள் (543 லோக் சபா + 245 ராஜ்ய சபா உறுப்பினர்கள்) வாக்களிக்க உள்ளனர். ஒற்றை மாற்று வாக்குப் பதிவு முறையில், ரகசிய வாக்குப் பதிவு நடை பெறும். இந்த தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் குறைந்தபட்சம் 20 எம்.பிக்களின் பரிந்துரை மற்றும் 20 எம்.பிக்களின் ஆதரவுடன் வேட்பு மனுவை தாக்கல் செய்ய வேண்டும்.
தற்போது, ராஜ்ய சபா துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் சிங் இடைக்காலத் தலைவர் பொறுப்பில் உள்ள நிலையில், புதிய குடியரசுத் துணைத் தலைவர் செப்டம்பர் மாதத்திற்குள் பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.