நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சென்னை மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் ப. சுப்பராயனுக்கு மணிமண்டபம் கட்டும் வாக்குறுதியை திமுக நிறைவேற்றவில்லை என்று தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் முன்வைத்த குற்றச்சாட்டுக்கு, திமுக தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது.
விஜய்யின் குற்றச்சாட்டு
மக்கள் சந்திப்பு பிரசார பயணம் மேற்கொண்டு வரும் விஜய், இன்று நாமக்கல்லில் பேசுகையில், "நாமக்கல்லைச் சேர்ந்த முன்னாள் முதலமைச்சர் சுப்பராயனுக்கு மணிமண்டபம் கட்டுவோம் என்ற வாக்குறுதி நம்பர் 456-ஐ திமுக நிறைவேற்றவில்லை" என்று குற்றம்சாட்டினார்.
திமுகவின் பதில்
விஜய்யின் இந்தக் குற்றச்சாட்டுக்குப் பதிலளித்துள்ள திமுக மாணவரணிச் செயலாளர் ராஜிவ் காந்தி, தனது 'எக்ஸ்' பக்கத்தில், "சென்னை மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் ப.சுப்பராயனுக்கு நாமக்கலில் மணி மண்டபம் அமைக்கப்படும் என்ற வாக்குறுதியை தமிழ்நாடு அரசு நிறைவேற்றவில்லை என ‘கீச்சி’ ட்டுள்ளார்.
கடந்த 2024 மே மாதம் நாமக்கல் மாவட்டம், தோட்டக்கூர்பட்டி கிராமத்தில் ப. சுப்பராயனுக்கு நினைவரங்கம் கட்டும் பணியை முதலமைச்சர் காணொளி காட்சி மூலம் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். கடந்த ஓராண்டாக இதன் கட்டுமானப் பணி நடந்து வந்த நிலையில், தற்போது பணிகள் நிறைவடைந்து திறப்பு விழாவிற்கு தயார் நிலையில் உள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.