செங்கல்பட்டு மாவட்டத்தின் புதிய தலைமை அரசு மருத்துவமனையை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். ரூ.119.14 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள இந்த மருத்துவமனையில் 400 படுக்கை வசதிகள் உள்ளன.
மருத்துவமனை திறப்பு விழா
தாம்பரம் சானடோரியத்தில் ஆறு தளங்களுடன் அமைந்துள்ள இந்த மருத்துவமனையை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். திறப்பு விழாவிற்குப் பிறகு மருத்துவமனையில் உள்ள சிறப்பு வசதிகளை அவர் பார்வையிட்டார். இந்த மருத்துவமனை, செங்கல்பட்டு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளின் மக்களுக்குச் சிறந்த மருத்துவச் சேவையை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கிய முதல்வர்
இதைத் தொடர்ந்து, விமான நிலையம் அருகே உள்ள கண்டோன்மெண்ட் பகுதியில் நடைபெற்ற மற்றொரு அரசு விழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டார். அங்கு, 20,021 ஏழை எளிய மக்களுக்கு ரூ.1,672.52 கோடி மதிப்பிலான இலவச வீட்டுமனைப் பட்டாக்களை அவர் வழங்கினார்.
முதல்வர் ஸ்டாலின் பேச்சு
இந்த விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், "தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சிக்கு அடித்தளமாக இருக்கக்கூடிய கல்விக்கொள்கையை நேற்று வெளியிட்டேன். கல்வியும், மருத்துவமும் தான் நமது திராவிட மாடல் அரசின் இரு கண்கள். காலுக்கு கீழ் கொஞ்சம் நிலமும், தலைக்கு மேல் கூரையும் இன்றும் பலருக்கு கனவாகவே உள்ளது. ஒரு மனிதனுக்கு அடிப்படை தேவை உணவு, உடை, இருப்பிடம் தான். ஆனால், அது கிடைப்பதில்லை. பட்டா வழங்குவதில் நான் தனி கவனம் செலுத்தி வருகிறேன். கடந்த 2021-ம் ஆண்டு முதல் தற்போது வரை 17.74 லட்சம் பேருக்கு வீட்டுமனை பட்டா வழங்கி உள்ளோம்.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சிக்குப் பிறகு தற்போது தமிழ்நாடு இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சி அடைந்துள்ளது. இந்த வளர்ச்சியைப் பொறுத்துக்கொள்ள முடியாத எடப்பாடி பழனிசாமி, மத்திய அரசின் புள்ளிவிவரத்தையே தவறு என்று கூறுகிறார். அடிப்படை தெரியாத அறிவிலிபோல் அறிக்கை வெளியிடுகிறார். மத்திய அரசால் சாதிக்க முடியாததை மு.க.ஸ்டாலின் சாதிக்கிறாரே என்ற வயிற்றெரிச்சலில் அவர் பேசுகிறார். இந்தியாவே தமிழ்நாட்டைத் திரும்பிப் பார்த்து 'இதுதான் வளர்ச்சி' என்று சொல்லும் அளவுக்கு நமது அரசு செயல்படும்" என்று பேசினார்.