தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தனது அரசியல் வாழ்வின் முதல் தேர்தல் சுற்றுப்பயணத்தை நேற்று திருச்சியில் தொடங்கினார். மக்களின் அமோக வரவேற்புக்கு மத்தியில் அவரது சுற்றுப்பயணம் அமைந்தாலும், காலதாமதம் காரணமாக பெரம்பலூரில் திட்டமிடப்பட்டிருந்த பரப்புரை ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில், "பெரம்பலூர் மக்களை சந்திக்க மீண்டும் வருவேன்" என்று விஜய் தெரிவித்துள்ளார்.
சுற்றுப்பயணம் மற்றும் மக்கள் வரவேற்பு
திருச்சி விமான நிலையம் வந்த விஜய்க்குத் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். விமான நிலையத்தில் இருந்து மரக்கடை பகுதிக்குச் செல்ல ஏற்பட்ட கடும் போக்குவரத்து நெரிசல் காரணமாக, 5 மணி நேர தாமதத்திற்குப் பிறகே அவர் மக்களைச் சந்தித்தார். அதைத் தொடர்ந்து, அரியலூரில் இரவு 8.45 மணிக்கு உரையாற்றினார். எனினும், பெரம்பலூரில் திட்டமிடப்பட்டிருந்த பரப்புரை ரத்து செய்யப்பட்டதால், அங்கு கூடியிருந்த தொண்டர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
விஜய்யின் எக்ஸ் பதிவில் விளக்கம்
இந்த நிலையில், பெரம்பலூரில் சந்திப்பு ரத்து செய்யப்பட்டது குறித்து விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் வருத்தம் தெரிவித்துள்ளார்.
அந்தப் பதிவில், "உங்கள் விஜய் நான் வரேன் எனும் நமது மக்கள் சந்திப்புப் பயணம், தித்திப்புடன் திருச்சியில் நேற்று தொடங்கியது. தொடர்ந்து நம் மக்கள் சந்திப்பானது அரியலூர், குன்னம் வரை நீண்டது. அனைத்து இடங்களிலும் மக்களின் தன்னெழுச்சியான பேரன்பும், பேராதரவும் மனம் நெகிழச் செய்தது. உங்கள் அனைவருக்கும் கோடான கோடி நன்றி.
வழிநெடுக மிக நீண்ட தூரம் கூடியிருந்த மக்கள் திரளைக் கடந்து செல்ல இயலாததால், நேற்று நள்ளிரவு கடந்தும் பெரம்பலூரில் நம்மைச் சந்திக்கக் கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான உறவுகளைக் காண இயலாத ஒரு சூழல் ஏற்பட்டது. எனவே, அனைவரது நலன் கருதி, மிகுந்த மன வருத்தத்துடன், மீண்டும் இன்னொரு நாள் பெரம்பலூர் வருவதென முடிவெடுக்க வேண்டிய நிலை உண்டானது. பேரன்பு கொண்டு காத்திருந்த பெரம்பலூர் மக்களிடம் என்னுடைய வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். நிச்சயமாக உங்களைச் சந்திக்க மீண்டும் வருவேன்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.