தங்கமணி ‘கட்சிக்கு எதிரான ஆட்களுக்கும் தனக்குத் தோதான முகங்களுக்கும் பதவி கொடுத்து கோஷ்டிகளை ஊக்குவிக்கிறார்' என எடப்பாடியிடமே நேரடி புகாரும், ‘முன்னாள் எம்.எல்.ஏ பாஸ்கருக்கும், தங்கமணிக்கும் தொடரும் ஏழாம் பொருத்தத்தால் ‘மாவட்டத்தைப் பிரி' என்று கோஷ்டிப் புகைச்சலும்தான் முட்டை மாவட்ட அ.தி.மு.கவில் அனல் காத்து.
இதுபற்றி முட்டை மாவட்ட முன்னணி அ.தி.மு.க நிர்வாகிகளிடம் பேசினோம். மாவட்ட நிர்வாக பதவிகளுக்கான நபர்களை பரிந்துரைக்குமாறு ஒன்றியங்களிடம் பட்டியல் கேட்டிருந்தார் தங்கமணி. நாமக்கல் நகரம், மாநகரம் ஆகிவிட்டபடியால் அந்தப் பகுதிக்கு மட்டும் முன்னாள் எம்.எல்.ஏ பாஸ்கர் பட்டியல் கொடுக்கவில்லை. வாங்கிய பட்டியலில் தங்கமணி ஆதரவாளர்கள் கொடுத்த பட்டியல் ஓ.கே செய்யப்பட்டிருக்கிறது.
புதுச்சத்திரம் கிழக்கு ஒன்றியச் செயலாளராக இருந்த நடேசனை எடுத்துவிட்டு அவருக்கு பதிலாக அவரின் மகன் பிரபாகரனுக்கு பதவி கொடுத்திருக்கிறார். நடேசன், எதிர்முகாம் எம்.எல்.ஏ.வுடன் எவ்வளவு இணக்கம் என்பது ஊருக்கே தெரியும். இரண்டு பேரும் சேர்ந்து ஒப்பந்தமே எடுத்து வேலை செய்திருக்கிறார்கள். ஒருகட்டத்தில் கட்சியை விட்டு எதிர்முகாமுக்குச் செல்ல பிளான் போட்டார். அவருடைய பேத்தியை கள்ளக்குறிச்சி அதிமுக மாவட்டச் செயலாளர் குமரகுரு குடும்பத்தில் கொடுத்திருக்கிறார்.
அப்போது குமரகுரு, 'நீங்கள் எதிர்க்கட்சியில் ஐக்கியமானால், உங்க வீட்டில் நான் கைநனைக்க முடியாது என சொன்னதாலும் தங்கமணியுடன் சமாதானமாக பாஸ்கர் போனதாலும் அ.தி.மு.கவிலேயே இருந்துவிட்டார். இப்போது நிர்வாகிகள் மாற்றத்தில் நடேசனுக்கு மாவட்ட எம்.ஜி.ஆர் மன்றத்தில் பதவியும், நடேசனின் மகனும், குமரகுரு சம்பந்தியுமான பிரபாகரனுக்கு நடேசன் வகித்த ஒன்றியச் செயலாளர் பதவியை கொடுத்திருக்கிறார்கள்.
மூத்த மகன் கட்சி விசுவாசிதான். அவர் கிளைச் செயலாளர் பதவியில் இருக்கிறார். நடேசனின் பேரனுக்கு ஒன்றிய இளைஞர் பாசறையில் பதவி போட்டு இருக்கிறார். நடேசனின் ஊரான மின்னாம்பள்ளிக்காரங்க 40 பேருக்கு மேல ஒன்றியப் பதவி கொடுத்து இருக்கிறார்கள். புதுச்சத்திரம் ஒன்றிய அதிமுககாரங்க பகிரங்கமாக திமுகவுக்கு தேர்தல் வேலை செய்த வீடியோ ஆதாரம் இருக்கு, இது தங்கமணிக்கும் தெரியும். இப்ப அவர்களுக்கே மாவட்ட பதவியும் கொடுத்திருக்கிறார்.
சமாதானம் படுத்தும் எடப்பாடி:
'ஒரே ஊருக்கும் ஒரே குடும்பத்துக்கும் மட்டும் பதவிகளா?" என்று கொதித்துப்போன அதே ஒன்றியத்தைச் சேர்ந்த ஒருத்தர் கட்சிக்காரங்களை எடப்பாடியிடம் கூட்டிச் சென்று புகார் கொடுத்தார். எடப்பாடி 'வெளியில எதையும் சொல்ல வேணாம். நான் விசாரிக்கிறேன்'னு சொல்லி அனுப்பி இருக்கிறார்.
மின்னாம்பள்ளி கூத்து இப்படி என்றால் சில ஒன்றியங்களில் ஒன்றியச் செயலாளர்கள் கொடுத்த லிஸ்ட் வேலைக்கு ஆகவில்லை. தங்கமணி ஆதரவாளர்கள் கொடுத்த லிஸ்ட் மட்டுமே வேலை செஞ்சிருக்கு. சேந்தமங்கலம் பேரூர் செயலாளர் தங்கமணி வீட்டுக்கே போய் லிஸ்ட் கொடுத்திருக்கிறார். சத்தியம் செய்யாத குறையாகப் பேசி தங்கமணி பேரூர் செயலாளரை அனுப்பிவிட்டு, தன்னோட ஆதரவாளர் கொடுத்த லிஸ்ட்டையே போட்டுவிட்டார். இப்ப பேரூர் செயலாளர் நூடுல்ஸ் ஆகிவிட்டார். மோகனூர் ஒன்றியத்திலேயும் கட்சிக்கு விசுவாசமில்லாத சிலருக்கு பதவி போட்டு இருக்கிறார். முன்னாள் எம்.எல்.ஏ பாஸ்கருக்கும் இவருக்கும் இருக்கும் மோதல் போக்குதான் ஒருதலைப்பட்சமாக செயல்படுவதற்கு காரணம்.
தங்கமணியோடு பேசுவதை நிறுத்திய MLA:
முன்னாள் எம்.எல்.ஏ. பாஸ்கருக்கு எதிராக ஸ்ரீதேவி மோகன் என்பவரை கொண்டு வந்தார் தங்கமணி. அப்போதே பாஸ்கருக்கும் தங்கமணிக்கும் ஏழாம் பொருத்தம் ஸ்டார்ட் ஆகிடுச்சு. இப்போதே ஸ்ரீதேவி மோகனுக்கு மாநில வர்த்தக அணித் துணைச் செயலாளர் பதவி கொடுத்திருக்கிறார். மோகனுடன் இருக்கும் நபர்களுக்கு மாவட்ட அணியில் பதவி கொடுத்திருக்கிறார்.
மோகனின் சொந்த ஊரில் ஏற்பட்ட ஒரு தகராறில் பாஸ்கரின் நண்பரும் பொதுக்குழு உறுப்பினருமான மயில் சுதந்திரத்தின் மீது வழக்குப் போடப்பட்டது. அதைத் தடுக்க தங்கமணி எதுவுமே செய்யவில்லை. இதையெல்லாம் பார்த்த பாஸ்கர் தரப்பு செம கடுப்புல இருந்தது. தனக்கு எதிரான ஆட்களை மாவட்டப் பதவிக்குக் கொண்டுவந்து கோஷ்டியை உருவாக்குவதாக நினைத்த பாஸ்கர், தங்கமணியோடு பேசுவதை அறவே நிறுத்திவிட்டார். பாஸ்கர் தரப்பு ஆதரவாளர்கள் யார் போய் புகார் சொன்னாலும் ரெண்டு தரப்பை கூப்பிட்டு வைத்து தங்கமணி பேசுவதே கிடையாது. சில இடங்களில் தண்ணீர் பந்தல் ரெண்டு கோஷ்டியாக திறந்தது. இப்ப பாஸ்கர் தரப்பு சீரியஸ் டிஷ்கஷன் செய்வதாக தகவல்" என்று முடித்தார்கள்.
மாவட்டத்தை ரெண்டாக பிரிக்க கோரிக்கை:
கட்சியின் சீனியர் நிர்வாகி ஒருவரிடம் பேசினோம். "பாஸ்கர் தரப்பு மாவட்டத்தை ரெண்டாகப் பிரித்தால் மட்டுமே இனி கட்சி நிகழ்வுகள், தொடர்புகள் தொய்வின்றிப் போகுமுன்னு நினைக்கிறாங்க. இதை எடப்பாடியிடம் சொல்லத் தயார் ஆயிட்டாங்க தங்கமணி இந்த முடிவுக்கு என்ன சொல்லப் போறார்ன்னு தெரியல" என்றார். எடப்பாடியிடம் புகார் சொன்னதாகப் பேசப்படும் புதுச்சத்திரம் ஒன்றிய துணைச் செயலாளர் அசோகனிடம் பேசினோம். "அப்படி எதுவுமே இல்லீங்க. எல்லாம் பொதுச்செயலாளர் பார்த்துக்கிறேன்னு சொல்லியிருக்கார். உங்ககிட்ட பேசமுடியாதுங்க" என்று போனை டக்கென்று வைத்துவிட்டார்.
நாமக்கல் முன்னாள் எம்.எல்.ஏ பாஸ்கரை பல தடவை அழைத்தும் நமது அழைப்பை ஏற்கவில்லை. இறுதியாக முன்னாள் அமைச்சரும் மா.செயலாளருமான தங்கமணியிடம் பேசினோம். "அப்பாவிடம் இருந்து மகனுக்கு ஒன்றிய பதவி கொடுக்கப்பட்டுள்ளது. கட்சிக்கு விரோதமாக செயல்படறவங்களும், கட்சிக்கு வேலையே செய்யாதவங்களும், விசுவாசமா இல்லாதவங்களும் எதையாவது சொல்லிக்கிட்டு இருப்பாங்க. அதை நம்பாதீங்க. ஒரு கல்யாணத்தில இருக்கேன். பிறகு பேசறேன்" என்று வைத்துவிட்டார். நெருப்புல இருந்துதாங்க புகை வருது!
( கட்டுரை: கே.பழனிவேல், குமுதம் ரிப்போர்ட்டர், 16.05.2025)