நெல்லை அரசு மருத்துவ கல்லூரி பட்டமளிப்பு கலந்துக்கொண்டு 2019ஆம் கல்வி ஆண்டின் 250 மாணவர்களுக்குப் பட்டங்கள் மற்றும் பதக்கங்களைத் தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு வழங்கினார்.
பாஜக கூட்டணி கலகலத்து போய்விட்டது
தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “அதிமுக எம்.எல்.ஏவிடம் வேலை பார்ப்பதால் தான் காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளரைக் கொலை செய்வதற்கு துணிச்சல் வந்துள்ளது. பாரதிய ஜனதா கட்சி யாருடனும் கூட்டணி தேவையில்லையெனத் தேர்தல் ஆணையத்துடன் கூட்டணி வைத்துள்ளதை போலச் செயல்பட்டு வருகிறார்கள்.
பாஜகவின் மாநில தலைவரான பின்னர் நயினார் நாகேந்திரனுக்கு பேச வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அதனால் திமுகவை விமர்சித்து வருகிறார். முதலமைச்சர் நடைபயணத்தின்போது ஓபிஎஸ்ஸை சந்தித்தது அவர்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. பாஜக கூட்டணி கலகலத்து போய்விட்டது.
வட மாநில தொழிலாளர்களுக்கு வாக்குரிமை?
ஒரே ஒரு சந்திப்பையே பொறுத்துக்கொள்ள முடியாமல் பாஜக கூட்டணி அலறிப் பிரிந்துவிட்டது. கர்நாடகத்தில் ஒரு தொகுதியில் லட்சம் பேருக்கு மேல் போலி வாக்காளர்கள் சேர்த்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
பாராளுமன்றத்தில் கேள்வியைக் கேட்கக் கூடாது என ஆளுங்கட்சியினர் கூறி வருகிறார்கள். பாராளுமன்றத்திற்கு பிரதமர் வருவதே இல்லை. தேர்தல் ஆணைய நடவடிக்கைகுறித்து அமைச்சர் பாராளுமன்றத்தில் விவாதிக்க மறுக்கிறார். இதேபோல் போலி வாக்காளர்களைச் சேர்த்து ஆர்.எஸ்.எஸ் சரி செய்து வருகிறது. வட மாநில தொழிலாளர்களுக்கு வாக்குரிமை கொடுக்க வேண்டும் என எந்த இடத்தில் முதல்வர் சொல்லவே இல்லை.
இருமொழி கொள்கையில் உறுதி
ஐந்து வருடங்களுக்கு மேல் இருந்தால் தான் இருப்பிட சான்றிதழ் பெற முடியும். அப்படி இருந்தால்தான் வாக்குரிமை கிடைக்கும். ஆனால் அதை எல்லாம் மறுதலித்துவிட்டு மகாராஷ்டிராவில் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். தமிழ், ஆங்கிலம் இரு மொழிக்கொள்கையில் தமிழகம் எப்போதும் உறுதியாகத் தொடர்ந்து இருந்து வருகிறது.
நாடகமும், நடிப்பும் தமிழக அரசுக்குத் தேவையில்லை. பாஜக ஒருவரை கூட்டணியில் சேர்க்க முதலில் அவரை அச்சுறுத்திப் பார்க்கிறது. பின்னர் ஆசை வார்த்தையை அவருக்குக் கூற வேண்டும். அடுத்ததாக ஓபிஎஸ்ஸை போல் அவமானப்படுத்த வேண்டும். இ டி, ஐ டி துணையோடு இவை அனைத்தையும் பாஜக செய்து வருகிறது” எனக் குற்றம்சாட்டினார்.