பாட்டாளி மக்கள் கட்சியின் உட்கட்சித் தலைமை விவகாரம் முற்றியுள்ள நிலையில், கட்சி நிறுவனர் ராமதாஸ் ஆதரவாளரும் மூத்த நிர்வாகியுமான ஜி.கே. மணி, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்யக்கோரி டெல்லி நாடாளுமன்ற ஸ்ட்ரீட் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
சின்னம் முடங்கும் அபாயம் மற்றும் நீதிமன்ற உத்தரவு
பாமக தலைவர் அன்புமணி என அங்கீகரித்துத் தேர்தல் ஆணையம் ராமதாஸ் தரப்பிற்குக் கடிதம் அனுப்பியிருந்தது. இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தை நாடவும் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி இருந்தது. இதைத் தொடர்ந்து டெல்லி நீதிமன்றத்தில் ராமதாஸ் தரப்பு வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கில் விசாரணைக்கு வந்தபோது, பாமகவின் உட்கட்சி விவகாரத்தால் மாம்பழம் சின்னத்தை முடக்கப் போவதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்தது. மேலும், இந்த வழக்கை கிரிமினல் நீதிமன்றத்தை நாடவும் டெல்லி நீதிமன்றம் ராமதாஸ் தரப்பிற்குக் கடந்த முன்தினம் உத்தரவிட்டு இருந்தது.
ஜி.கே. மணியின் புகார்
இந்தச் சூழலில், டெல்லியில் முகாமிட்டுள்ள ராமதாஸ் ஆதரவாளர் ஜி.கே. மணி, இன்று டெல்லி நாடாளுமன்ற ஸ்ட்ரீட் காவல் நிலையத்தில் அன்புமணி மீது ஒரு புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரில், தேர்தல் ஆணையத்தில் பொய்யான ஆவணங்களை அளித்து அன்புமணி ஏமாற்றி உள்ளார் என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார். அதனால், அன்புமணி மீது கிரிமினல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் ஜி.கே. மணி தனது புகாரில் வலியுறுத்தியுள்ளார். ஜி.கே. மணியின் இந்தக் கிரிமினல் புகார், பாமகவில் நிலவி வரும் உட்கட்சி மோதலை மேலும் அதிகரித்துள்ளதுடன், அரசியல் வட்டாரத்தில் சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

LIVE 24 X 7