"கடந்த ஐந்து ஆண்டுகளாக அதிமுக பிளவுபட்டு இருப்பதால், தொடர்ந்து தோல்விகளைச் சந்தித்து வருகிறது. இந்த நிலை மாற வேண்டும் என்றால், அனைவரும் ஒருங்கிணைக்கப்பட வேண்டும்" என்று ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் உள்ள சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனாரின் திருவுருவச் சிலைக்கு, அவரது 154-வது பிறந்த நாளை முன்னிட்டு, முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது, அதிமுக உரிமை மீட்புக் குழுவைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் அவரை வரவேற்றனர்.
இதையடுத்து, செய்தியாளர்களைச் சந்தித்த அவர், அதிமுகவில் நிலவி வரும் பிளவு குறித்தும், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் நிலைப்பாடு குறித்தும் பேசினார்.
செங்கோட்டையன் கருத்து சரிதான்
"அதிமுகவின் மூத்த முன்னோடி செங்கோட்டையன். எம்.ஜி.ஆர் காலம் முதல் மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட பல்வேறு முக்கியப் பொறுப்புகளை வகித்து, கட்சிக்கு உறுதுணையாக இருந்துள்ளார். கட்சிக்கு பல்வேறு பிரச்னைகள் வந்தபோதும், அவர் கட்சி வளர்ச்சிக்கும் தொண்டர்களை ஒருங்கிணைக்கவும் அளப்பரிய பணியாற்றியுள்ளார். செங்கோட்டையன் கருத்து சரிதான். அனைவரையும் ஒருங்கிணைத்தால்தான் மீண்டும் ஜெயலலிதாவின் ஆட்சியை கொண்டுவர முடியும் என்ற அவருடைய எண்ணம், மனசாட்சிக்கு உகந்தது. அது நிறைவேற வாழ்த்துகள். நாங்களும் அதற்காகத்தான் தொடர்ந்து முயற்சி செய்கிறோம்," என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
அதிமுக தொண்டர்களை வெளியேற்ற முடியாது
அதிமுக கட்சி தோன்றியதில் இருந்து தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் தோல்வியைச் சந்தித்தது கிடையாது. ஆனால், கடந்த ஐந்து ஆண்டுகளாக அதிமுக பிளவுபட்டு இருப்பதால், தொடர்ந்து தோல்விகளைச் சந்தித்து வருகிறது. இந்த நிலை மாற வேண்டும் என்றால், அனைவரும் ஒருங்கிணைக்கப்பட வேண்டும். இதற்காகத்தான் நாங்கள் போராடி வருகிறோம்.
"அதிமுக ஒரு தொண்டர்களின் இயக்கம். இந்த இயக்கத்தில் இருந்து தொண்டர்களை யாராலும் வெளியேற்ற முடியாது. கழகம் ஒருங்கிணைய வேண்டும் என யார் ஆதரவு தெரிவித்தாலும், அவர்களுக்கு நாங்கள் பக்கபலமாக நிற்போம்," என்று ஓ.பன்னீர்செல்வம் உறுதியளித்தார்.