"திமுக ஆட்சியில் தங்கம், வைரம் திருடப்படுவது போல் கிட்னியும் திருடப்படுகிறது" என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார். மேலும், "செந்தில் பாலாஜி பொய் சொல்வதில் டாக்டர் பட்டம் பெற்றவர்" என்றும் அவர் கடுமையாக விமர்சித்தார்.
'மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்' என்ற தலைப்பில் பிரச்சாரப் பயணத்தை மேற்கொண்டுள்ள எடப்பாடி பழனிசாமி, நேற்று (செப். 25) கரூரில் பொதுக்கூட்டத்தில் பேசினார்.
செந்தில் பாலாஜி குறித்து...
"எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது மு.க. ஸ்டாலின், செந்தில் பாலாஜியை ஊழல்வாதி என்று பேசினார். ஆனால், இப்போது அவரே அவரை நல்லவர், வல்லவர் என்கிறார். பொய் சொல்வதில் செந்தில் பாலாஜிக்கு டாக்டர் பட்டம் கொடுக்கலாம். உலகத்தில் உள்ள எல்லாவித மோசடிகளையும் அறிந்தவர் அவர். ஆர்.கே.நகர் தேர்தலில் ரூ.20 கொடுத்து மக்களை ஏமாற்றியவர். டாஸ்மாக்கில் மட்டும் ரூ.20 ஆயிரம் கோடி, மின்சாரத் துறையில் பல ஆயிரம் கோடி ஊழல் செய்துள்ளார். மின்சாரத் துறையில் நடந்த ஊழலில் அவர் தப்பிக்க முடியாது. 2026-ல் அதிமுக ஆட்சிக்கு வந்ததும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். செந்தில் பாலாஜியை ஸ்டாலினால் கூடக் காப்பாற்ற முடியவில்லை; உங்களை எப்படி அவர் காப்பாற்றப் போகிறார்? அவர் மீண்டும் சிறைக்குச் செல்வார்" என்று பேசினார்.
'திமுக ஆட்சியில் மணல் கொள்ளை'
"2021 தேர்தல் பிரச்சாரத்தில் மாட்டு வண்டியில் மணல் எடுக்கலாம் என்று கூறி வாக்குகள் வாங்கி வெற்றி பெற்று அமைச்சரானார் செந்தில் பாலாஜி. ஆனால், இன்று லாரிகளில் மணல் திருடுகிறார்கள். கரூரில் திருட்டு மணல் எடுப்பதை கண்டித்தவரை வெட்டி சாய்த்தனர். கரூர் மாவட்டத்தில் மட்டும் மணல் திருட்டால் ஐந்து கொலைகள் நடந்துள்ளன" என்று குற்றம்சாட்டினார்.
'திமுக ஆட்சியில் கிட்னி திருட்டு'
"இந்த நாட்டில் தங்கம், வைரம், வெள்ளி திருடப்படும். ஆனால், திமுக ஆட்சியில் கிட்னி திருடப்படுகிறது. நாமக்கல்லில் ஒரு பெண்ணிடம் கிட்னிக்கு பதிலாகக் கல்லீரலை திருடிவிட்டார்கள். இந்த ஆட்சியில் மருத்துவமனைக்குச் சென்றால் கிட்னி தப்புமா எனத் தெரியவில்லை. அதிமுக ஆட்சிக்கு வந்ததும், கிட்னி திருட்டு குறித்து முறையாக விசாரித்து தண்டனை வழங்கும்" என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.
சட்டம் ஒழுங்கு குறித்த குற்றச்சாட்டுக்கள்
"போதைப்பொருள் விற்பனை தமிழகத்தில் தலைவிரித்தாடுகிறது. திண்டுக்கல் துணை மேயரின் மகன் போதை வழக்கில் மாட்டிக்கொண்டுள்ளார். இந்த ஆட்சிக்கு முடிவு கட்டப்போவது போதை கலாச்சாரம்தான். சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்கெட்டுவிட்டது. காவல்துறை இன்று ஏவல் துறையாக மாறிவிட்டது" என்றும் அவர் சாடினார்.
மேலும், நான்கு வருடத்தில் திமுக அரசு ரூ.30 ஆயிரம் கோடி கொள்ளை அடித்து, இந்தியாவிலேயே ஊழலில் முதல் மாநிலமாகத் தமிழகத்தை மாற்றியுள்ளது. பத்திரப்பதிவு துறையில் ஊழல் தலைவிரித்தாடுகிறது. மின் கட்டணம் 67% உயர்ந்ததுடன், தண்ணீர், குப்பை, வீட்டு வரிகளும் 100% வரை உயர்ந்துள்ளன" என்று எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.