மேற்குத் தொடர்ச்சி மலையின் சிறுவாணி அடிவாரத்தில் அமைந்துள்ள கோவை குற்றாலம் பகுதிக்குட்பட்ட சீங்கப்பதி கிராமத்தில் உள்ள வன பத்ரகாளியம்மன் மற்றும் சாடியம்மன் கோவிலில், திமுகவினர் சார்பில் சிறப்பு அபிஷேகம் மற்றும் வழிபாடு நடத்தப்பட்டது.
செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராகப் பொறுப்பேற்கவும், 2026 ஆம் ஆண்டு திமுக மாபெரும் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கவும் வேண்டி இந்த சிறப்புப் பிரார்த்தனை நடைபெற்றது.
அமைச்சர் பதவி பறிப்போனது எதனால்?
முதல்வராக பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் மதுவிலக்கு ஆயத்தீர்வை மற்றும் மின்சாரத்துறை அமைச்சராக இருந்து வந்தவர் செந்தில்பாலாஜி. சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையினரால் செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டு சிறையிலிருந்த காலத்தில் அவரது ஜாமினுக்காக அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்டிருந்தார். ஜாமினில் வெளியே வந்த செந்தில் பாலாஜிக்கு மீண்டும் தமிழக அமைச்சரவையில் இடம் அளிக்கப்பட்டது.
இதற்கு அமலாக்கத்துறை சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதோடு உச்சநீதிமன்றத்தை நாடியது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் அமைச்சர் பதவியா? ஜாமின் வேண்டுமா? என்பதை ஏப்ரல் 28-ஆம் தேதிக்குள் தெரிவிக்குமாறு உத்தரவிட்டிருந்தார்கள். இதனைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் 27 ஆம் தேதி தமிழக அமைச்சரவையிலிருந்து செந்தில்பாலாஜி நீக்கப்பட்டார்.
வன பத்ரகாளியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு:
இந்நிலையில் தான் மீண்டும் அமைச்சராக செந்தில்பாலாஜி வர வேண்டும் என சிறப்பு வழிபாடு மேற்கொண்டுள்ளனர் திமுகவினர். கோவை மாவட்டத்தில், மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள சக்திவாய்ந்த வன பத்ரகாளியம்மன் மற்றும் சாடியம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேகம் செய்து வேண்டினால், நினைத்தது நடக்கும் என்பது அப்பகுதி மக்களின் ஆழ்ந்த நம்பிக்கை.
இந்த நம்பிக்கையின் அடிப்படையில், திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினர் ஏர்போர்ட் ராஜேந்திரன் மற்றும் அவரது மனைவி அமுத ஜோதி ஆகியோர், சீங்கப்பதி கிராம பழங்குடி மக்களுடன் இணைந்து சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர். கோவை குற்றாலம் அருவியில் இருந்து புனித நீர் கொண்டு வரப்பட்டு, வன பத்ரகாளியம்மன் மற்றும் சாடியம்மன் தெய்வங்களுக்குச் சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது.
இந்த சிறப்பு அபிஷேகம் மற்றும் வழிபாட்டில், சீங்கப்பதி கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பழங்குடி மக்கள் பங்கேற்று வழிபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.