கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், கேரளாவில் நடைபெறும் உலக ஐயப்ப மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொள்ள இருப்பதற்கும், விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த வன்னியரசு இந்து கடவுள் ராமர் குறித்துப் பேசியதற்கும் கடும் கண்டனம் தெரிவித்தார்.
முதல்வர் ஸ்டாலின் மீது விமர்சனம்
செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் பேசியதாவது, “முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழகத்தில் நடைபெறும் எந்தவொரு இந்துமத நிகழ்ச்சிக்கும் செல்வதில்லை. ஆனால் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அழைத்துள்ள உலக ஐயப்ப மாநாட்டுக்கு மட்டும் செல்கிறார். இந்துமத உணர்வுகளைப் புண்படுத்தும் விதமாக முதல்வரின் செயல்கள் உள்ளன. இது எந்தவிதமான நம்பிக்கை என்பதை அவர்கள் விளக்க வேண்டும்” என்றார்.
விசிக வன்னியரசுக்கு கண்டனம்
இந்து மதத்தை தீவிரமாகப் பின்பற்றுபவர் என்கிற அடிப்படையில் விசிக வன்னியரசு ராமர் குறித்துப் பேசியதை வன்மையாக கண்டிப்பதாகக் கூறிய தமிழிசை, “சமூக நீதியையும் சமத்துவத்தையும் போற்றுவது கம்பராமாயணமும் ராமரும்தான். அதற்கு ராமாயணத்திலேயே உதாரணங்கள் உள்ளன. ஆணவக் கொலைகளுக்கு ராமனும் சனாதன தர்மமும் காரணம் என்கிறார் வன்னியரசு. சட்டம் ஒழுங்கு மற்றும் அரசின் அஜாக்கிரதையினால்தான் ஆணவக் கொலைகள் நடைபெறுகின்றன.
பிற மாநிலங்களில் ஆணவக் கொலைக்கு எதிராக சட்டங்கள் இருக்கும்போது தமிழகத்தில் ஏன் சிறப்புச் சட்டம் கொண்டுவர முடியவில்லை? இதற்காக விசிக ஸ்டாலினிடம் சென்று போராட்டம் நடத்த வேண்டும்” என்றார்.
மேலும், “இந்து மதத்தைப் பின்பற்றுபவர்கள், ராமனை வணங்குபவர்களின் ஒரு ஓட்டு கூட அவர்களுக்குச் செல்லக்கூடாது” என அவர் வேண்டுகோள் விடுத்தார். வன்னியரசுக்கு பாஜக சார்பில் கம்பராமாயணம் புத்தகங்களை வழங்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
குடியரசு துணைத் தலைவர் தேர்தல்
“தமிழையும் தமிழர்களையும் போற்றுவது பாஜக தான். குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக ஒரு தமிழரை (சிபி ராதாகிருஷ்ணன்) அறிவித்தது பாஜக தான். ஆனால், திமுக உள்ளிட்ட இந்தி கூட்டணி கட்சியினர் அவருக்கு ஆதரவு அளிக்க மறுக்கின்றனர். தமிழர்களின் பாதுகாவலர்கள் என கூறிக் கொள்பவர்கள் ஏன் ஒரு தமிழரை குடியரசுத் துணைத் தலைவராக ஆதரிக்க மறுக்கின்றனர் எனத் தெரியவில்லை. இதற்கான காரணத்தை அவர்கள் கூற வேண்டும்” என்றார்.
“குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் தமிழ் பற்று எனும் முகமூடியை ஸ்டாலின் தான் போட்டுக் கொண்டுள்ளார். தமிழ் முகமூடி அணிந்து கொண்டு சிபி ராதாகிருஷ்ணன் வருகிறார் என முதல்வர் கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. தமிழர்களின் பாதுகாவலர்கள் என கூறுபவர்கள் அவர்கள் ஏன் ஒரு தமிழரை குடியரசுத் துணைத் தலைவராக ஆதரிக்க மறுக்கின்றனர். மம்தாவின் எதிர்ப்புக்காக தமிழ் வேட்பாளரை தியாகம் செய்தது ஏன் என அவர்கள் தான் கூற வேண்டும்” என்றார்.