விருதுநகர் மாவட்டம், சாத்தூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி., செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவரிடம் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த வானதி ஸ்ரீனிவாசன் இந்தியை நாங்கள் திணிக்கவில்லை எனவும் மக்களிடம் பொய்களை திமுக சொல்லி வருகிறது என்ற குற்றச்சாட்டிற்கு, அவர்கள் அண்ட புளுகு, ஆகாச புளுகை சொல்லி வருகிறார்கள்.
இந்தி திணிப்புக்கு எதிராக போராட்டம்
தமிழ்நாடு 1938ல் இருந்து இந்தி திணிப்பை எதிர்கொண்டு வருவதாகவும், போராடி வெற்றி பெற்றுள்ளதாகவும், இந்த வரலாற்றை அவர் அறிந்திருக்க வாய்ப்பில்லை என கூறினார்.
தேசியக்கல்விக்கொள்கை முன்மொழி கல்வி திட்டத்தை கொண்டு வந்துள்ளது. அதில் இந்தி ஒன்று அதை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள். பிடி சோற்றில் பூசணிக்காய் மறைப்பது போன்று உள்ளது அவர்கள் பேச்சு என கடுமையாக சாடினார்.
தமிழ்நாட்டில் எடுபடாது
பாஜக தலைவர்கள் தமிழகத்திற்கு அடிக்கடி வருவது குறித்து கேள்விக்கு, எந்த மாநிலத்தில் தேர்தல் நடந்தாலும் அங்கு அடிக்கடி சென்று வருவது அவர்கள் வாடிக்கை. அவர்களின் இடைவிடாத உழைப்பு பாராட்டத்தக்கது. அது தமிழ்நாட்டில் எடுபடாது.தமிழ்நாட்டு மக்கள் மதவாத அரசியலுக்கு ஒருபோதும் ஆயத்தமாக மாட்டார்கள் என தெரிவித்தார்.
இடஒதுக்கீடு குறித்து உடனடியாக அறிவிக்க வேண்டும் என்ற அன்புமணியின் அறிவிப்பு கேள்விக்கு, இது அவர்களது கோரிக்கை. அன்புமணி தன்னுடைய தலைமையை நிரூபிக்க பல முயற்சிகளை எடுத்துக் கொண்டு வருகிறார்.
சமூக நீதிக்காக குரல் வரவேற்கத்தக்கது
பாமகவில் நடக்கும் உட்கட்சி விவகாரங்களிலும் தன்னை பாதுகாக்கும் நடவடிக்கை ஈடுபட்டு வருகிறார். சமூக நீதிக்காக குரல் கொடுப்பது வரவேற்கத்தக்கது.
2026 மக்கள் நலக்கூட்டணி போன்ற அமைய வாய்ப்பு உள்ளதா என்ற கேள்விக்கு, அதற்கான வாய்ப்புகளை இல்லை என கூறினார். மேலும் காவல்துறையினர் தொடர்ந்து அத்துமீறி வருவது குறித்த கேள்விக்கு, காவல்துறையினருக்கும், அரசுக்கும் களங்கம் ஏற்படுத்தும் விதமாக செயல்படும் காவல்துறையினர் மீது தமிழக முதலமைச்சர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிகார அத்துமீறல், தவறு செய்பவர்களை இரும்பு கரம் கொண்டு நசுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்தார்.
வழக்குப்பதிவு செய்தது வரவேற்கத்தக்கது
முருக பக்தர்கள் மாநாட்டில் அண்ணாமலை உள்ளிட்ட நால்வர்மிது வழக்குப்பதிவு குறித்த கேள்விக்கு, பெரியாரையும் அண்ணாவையும் விமர்சித்து வீடியோ வெளியிட்ட இந்து முன்னணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது. தற்போது நான்கு பேர் மீது வழக்குப்பதிவு செய்திருப்பது வரவேற்கத்தக்கது என தெரிவித்தார்.