விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை வெள்ளக்கோட்டையில் தெற்கு மாவட்ட திமுக சார்பில் ஓரணியில் தமிழ்நாடு விளக்க மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
ஆபத்தை நாம் தடுக்க வேண்டும்
இந்த பொதுக்கூட்டத்தில் திமுக பேச்சாளர்கள் கலந்து கொண்டு ஓரணியில் தமிழ்நாடு திட்டம் குறித்து விளக்கி பேசினர். இந்த ஓரணியில் பொதுக்கூட்ட நிகழ்ச்சியில் தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், “இந்த ஆட்சி தொடரும் என்பதில் யாருக்கும் எந்த சந்தேகமும் இல்லை. 2026ல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் மீண்டும் முதல்வராக வருவார் என்பதில் யாருக்கும் எந்த சந்தேகமும் இல்லை. சாதி மத பேதமில்லாமல் தமிழுக்கும் தமிழ்நாட்டிற்கும் வரும் ஆபத்தை நாம் தடுக்க வேண்டும்.
திமுக ஆட்சி தான்
அனைவரும் ஒரே குடையின் கீழ் வரவேண்டும் என்பதற்காகத்தான் முதல்வர் இந்த திட்டத்தை அறிவித்துள்ளார். இதன்மூலம் தமிழக அரசின் திட்டங்கள் மக்களுக்கு எந்த திட்டங்கள் கிடைக்கவில்லை என்பது தெரிந்துவிடும், அவர்களுக்கு அந்த திட்டம் வந்து சேரும்.
முதலமைச்சர் அனைவருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என நினைக்கிறார். திமுக ஒன்றுதான் தமிழ்நாட்டை ஆளும். இன்னும் 25 ஆண்டுகளுக்கு திமுக தான் ஆளுங்கட்சியாக இருக்கும்” என பேசினார். இதில் திமுக நிர்வாகிகள் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.