எம்.ஜி.ஆர் பற்றி நான் பேசியதும் எகிறி குதித்தவர்கள்.இப்போது வாய் முடி கொண்டு இருக்கிறார்கள் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
பாசிசத்தின் உச்சம்
சென்னை விமான நிலையத்திற்கு டெல்லியிலிருந்து வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “மழைக்கால கூட்டத் தொடர் நிறைவு நாளில் அறிமுகப்படுத்திய 3 சட்டங்கள் நாடாளுமன்ற ஜனநாயகத்தை குழி தோண்டி புதைக்கும் மிக மோசமான சட்டங்களாகும். 30 நாட்கள் விசாரணை கைதியாக இருந்தால் போதும் பிரதமர், முதலமைச்சர், அமைச்சர்கள் பதவியில் இருப்பவர்களை நீக்க முடியும் சட்ட மசோதா. இதை எதிர்கட்சிகள் கடுமையாக எதிர்த்ததால் நாடாளுமன்ற கூட்டு குழுவிற்கு அனுப்பி உள்ளனர்.
பாசிசத்தின் உச்சம் என்று சொல்லக் கூடிய வகையில் சட்டங்களைப் பா.ஜ.க. அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. ஏற்கனவே சி.ஏ.ஏ., என்.சி. ஆர்., என்.பி.ஆர்., போன்ற சட்டங்களை அறிமுகப்படுத்தினார்கள். எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையே நிறைவேற்றம் செய்தார்கள். ஆனால் அதை நடைமுறைப்படுத்த முடியாத நிலை உச்ச நீதிமன்றத்தால் ஏற்பட்டது. அதிலிருந்து ஒரு படிப்பினை பெற்று கொள்ளாமல் மோசமான கருப்பு சட்டங்களை அறிமுகப்படுத்தி இருப்பது நாடாளுமன்ற ஜனநாயகத்தின் மீதான பாசிச தாக்குதல். நாட்டு மக்கள் விழித்துக் கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் காலுன்ற துடிக்கிறார்கள். தமிழ்நாடு மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
சதி முயற்சி வெற்றி பெறாது
பீகாரில் 65 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கம் செய்யப்பட்டு இருப்பது அம்பலமாகி உள்ளது. ராகுல்காந்தி ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தி உள்ளார். கூட்டத்தொடரில் எதிர்கட்சிகள் வலியுறுத்தியும், அரசு அதை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை. விவாதிக்க முன் வரவில்லை. கடும் எதிர்ப்புக்கு இடையில் சில மசோதாக்களை சட்டங்களாக்கி உள்ளனர். மக்கள் விரோத சட்டங்களை அறிமுகப்படுத்தக்கூடிய மழைகால கூட்டத்தொடராக அமைந்து உள்ளது. பா.ஜ.க அரசு பாசிச அரசு என்பதை உறுதிப்படுத்த கூட்ட தொடர் சான்றாக அமைத்துள்ளது.
அமித்ஷா தமிழ்நாட்டிற்கு அடிக்கடி வருகிறார். தமிழ்நாட்டில் தாமரை மலரும் எனக் குறி சொல்கிறார். திமுக தலைமையிலான மதசார்பற்ற கூட்டணியை வீழ்த்துவதுதான் வேலை எனச் சவடால் பேசுகிறார். புதிதாகத் தோன்றுகிற கட்சிகளாக இருந்தாலும், பழைய கட்சிகள், பா.ஜ.க போன்ற கட்சிகளும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியை வீழ்த்த வேண்டும் என்பதில் குறியாக உள்ளனர். தமிழ்நாடு மண்னில் அவர்களின் சதி முயற்சி வெற்றி பெறாது என்பதை உரிய நேரத்தில் மக்கள் உணர்த்துவார்கள்.
விஜய்யிடம் ஆக்கப்பூர்வமான கருத்து இல்லை
த.வெ.க. நடத்திய 2வது மாநாடு வெற்று கூச்சலுக்கு ஆரவாரத்துக்கும் அடையாளமாக இருந்தது. உருப்படியான எந்த வித கொள்கை கோட்டுபாடு இல்லை. ஆக்கப்பூர்வமான செயல் திட்டம் இல்லை. திமுக வெறுப்பு என்பதே அந்த மேடையில் உமிழ்ந்த அரசியல். ஆட்சிக்கு வருவோம் என்று ஆர்பரித்த பகல் கனவைக் கூச்சலாக ழுழங்கிய ழுழக்கமாக இருந்தது. 2 மாநாடு நடத்தியும் கட்சி கொள்கைகள் என்னவென்று த.வெ.கவினருக்கே புரியவில்லை என்பதை உறுதிப்படுத்தி உள்ளனர். இந்தனை லட்சம் பேரைத் திரட்டி வெறும் சவால்களை முன்வைத்து உள்ளார். திமுக வெறுப்பை மட்டுமே உமிழ்ந்து உள்ளார். விஜய் பேச்சில் ஆக்கப்பூர்வமான கருத்தும், கருத்தியலும் இல்லை.
அம்பேத்கார் கொள்கை என்ன என்று மேடையில் ஒருவராவது பேசியது உண்டா. பெரியார் கொள்கை என்ன என்று பேச்சில் வெளிப்பட்டதா? மாநாட்டில் பேசியவர்கள் சவடால்அடித்தார்கள். ஆட்சியைக் கைப்பற்றுவோம் என்ற வேட்கையை வெளிப்படுத்தினார்கள். திமுக எதிராகப் பேசினார்கள். அவர்களது கொள்கை ஆசான்களை பற்றி எதையும் பேசவில்லை.
திமுக மீதான வெறுப்பாக மாறி இருக்கிறது
பா.ஜ.கவை கொள்கை எதிரி. திமுகவை அரசியல் எதிரியென ஏற்கெனவே சொன்னதை ரிப்பீட்டு செய்து உள்ளார். கொள்கையும், அரசியலும் வேறு வேறு அல்ல. கொள்கை இல்லாமல் அரசியல் இல்லை. அரசியல் இல்லாமல் கொள்கை இல்லை. திமுக அரசியல் எதிரி என்றால் அதன் கொள்கை எதிரி இல்லையா என்ற கேள்வி எழுகிறது. பாஜக கொள்கை எதிரி என்றால் அரசியல் எதிரி இல்லையா? இதில் குழப்பத்தில் உள்ளனர். வெறும் தேர்தல் அரசியலுக்கு பகையாகத் திமுகவை கருதுகிறார்கள். ஆட்சி அதிகாரத்திலிருந்து திமுகவை அப்புறப்படுத்திவிட்டு வர விரும்புகிறார்கள்.இந்த விருப்பத்தைச் சொல்லத் திரட்டிப் பேசி இருக்கிறார்கள்.
அதிகாரத்தில் இருப்பவர்களைக் கேள்வி கேட்பது விமர்சிப்பது பிரச்சனை இல்லை. அதைத் தங்களுக்கான ஒரே அரசியல் கோட்டுபாட்டாக வைத்து உள்ளார்கள். அது தான் கொள்கை என்பதை மீண்டும் சொல்கிறார்கள். மற்றப்படி கொள்கை சார்ந்த தீர்மானம் எதுவும் முன் வைக்கவில்லை. இந்தியாவில் எஸ்.ஐ.ஆர் பிரச்சனைகுறித்து ஏன் தீர்மானம் நிறைவேற்றவில்லை. ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்து உள்ளவர்கள் வாக்கு திருட்டு குறித்து விவாதித்து வருகிறார்கள். வாக்கு திருட்டில் தேர்தல் ஆணையமே பா.ஜ.கவிற்கு துணை போகிற குற்றசெயல் குறித்து தவெக நிலைப்பாடு என்ன? அதைவிடப் பெரிய பிரச்சனை இருக்கிறது. அதுபற்றிப் பேசவில்லை. ஜனநாயகத்தை சிதைக்க கூடிய 3 கொடிய சட்டங்கள்குறித்து நிலைப்பாடு என்ன? ஆணவப்படுகொலை தடுப்பு சட்டங்கள்குறித்து பேசாதது என்ன? அதிகாரத்தின் மீது உள்ள வெறி திமுக மீதான வெறுப்பாக மாறி இருக்கிறது. எம்.ஜி.ஆர் பற்றி நான் பேசியதும் எகிறி குதித்தவர்கள். இப்போது வாய் முடி கொண்டு இருக்கிறார்கள்” எனத் தெரிவித்தார்.