தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரை அருகே உள்ள பாரபத்தியில் கடந்த ஆகஸ்ட் 21 ஆம் தேதி பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த மாநாட்டில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான தொண்டர்கள் மிகுந்த உற்சாகத்துடன் கலந்துகொண்டனர்.
வெயிலின் தாக்கம்- மயக்கமடைந்த தொண்டர்கள்
மாநாட்டுத் திடல் காலை முதலே தொண்டர்களால் நிரம்பி வழிந்தது. கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் லட்சக்கணக்கான தொண்டர்கள் திரண்டதால், மாநாடு ஒரு மணி நேரம் முன்னதாகவே தொடங்கியது. மாநாட்டுக்கு வந்திருந்த தொண்டர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளும், குடிநீரும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. எனினும், கடும் வெயில் மற்றும் கூட்ட நெரிசல் காரணமாக சில தொண்டர்கள் மயக்கமடைந்தனர். அவர்களுக்கு மாநாட்டுத் திடலில் அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமில் உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது.
தொண்டர்கள் மரணம்
இதற்கிடையில், மாநாட்டிற்கு வந்திருந்த தொண்டர்கள் மூவர் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்தனர். விருதுநகர் மாவட்டம், இனாம் கரிசல்குளம் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் காளிராஜ், மாநாட்டிற்காக பேனர் வைத்துக்கொண்டிருந்தபோது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதேபோல், மாநாடு முடிந்து திரும்பிக்கொண்டிருந்த செங்கல்பட்டு மாவட்டம், ஊர்ப்பக்கத்தை சேர்ந்த ரா. பிரபாகரன், மாரடைப்பால் காலமானார். மேலும், நீலகிரி மாவட்டம், கோத்தகிரியைச் சேர்ந்த கா. ரித்திக் ரோஷன் என்ற தொண்டர், மாநாடு முடிந்து திரும்பிச் செல்லும் வழியில் ஏற்பட்ட மூச்சுத்திணறல் காரணமாக உயிரிழந்தார்.
விஜய் இரங்கல்
இந்த நிலையில், உயிரிழந்த தொண்டர்களுக்குக் தவெக தலைவர் விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
“நம் மீது தீராப் பற்று கொண்ட கழகத் தோழர்கள் செங்கல்பட்டு மாவட்டம், ஊரப்பாக்கம் பகுதி நிர்வாகி R.பிரபாகரன், நீலகிரி மாவட்டம், கோத்தகிரி, கேம்ப் லைன் K.ரித்திக் ரோஷன், விருதுநகர் மாவட்டம், இனாம் கரிசல்குளம் கிளைக் கழக நிர்வாகி K. காளிராஜ் ஆகியோர் மதுரையில் நடைபெற்ற மாநாட்டிற்கு முன்பும் பின்பும் காலமான செய்தியறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன்.
நம் கழகத்திற்கான இவர்களது பற்றுறுதியும் பங்களிப்பும் என்றென்றும் நம் நினைவில் நிற்கும். அவர்கள் விரும்பிய இலட்சிய சமுதாயத்தை நாம் படைத்துக் காட்டுவோம். கழகத் தோழர்களைப் பிரிந்து வாடும் அவர்களின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
காலமான கழகத் தோழர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றேன். அவர்களின் குடும்பங்களுக்கு நம் கழகம் உறுதுணையாக இருக்கும்" என்று பதிவிட்டுள்ளார்.