பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, ஓ.பன்னீர்செல்வம் - நயினார் நாகேந்திரன் கருத்து மோதல் குறித்து பேசிய அவர், நயினார் நாகேந்திரன் குறித்து ஓபிஎஸ் குற்றம் சொல்வதை நாங்கள் ஏற்றுக்கொள்ளமாட்டோம்” என்று தெரிவித்தார். அவர் அளித்த பேட்டியின் விவரங்கள் பின்வருமாறு;
முதல்வர் ஸ்டாலின் மீதான விமர்சனம்
"மத்திய அரசு எல்லா விதத்திலும் தமிழகத்துக்கு உதவி செய்துகொண்டுதான் இருக்கிறது. ஆனால், மக்களைப் பற்றிக் கவலைப்படாமல், மத்திய அரசைப் பற்றிக் குறை சொல்லி கடிதம் எழுதுவது முதலமைச்சர் ஸ்டாலினுக்கு வாடிக்கையாகிவிட்டது" என்று தமிழிசை சௌந்தரராஜன் விமர்சித்தார்.
கலைஞர் பாஜகவை ஆதரித்திருப்பார்
முதலமைச்சர் ஸ்டாலின் தனது கட்சித் தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில், "நாம் எப்போதும் கலைஞரின் வழியில்" என்று குறிப்பிட்டதுடன், கலைஞர் இன்று இருந்திருந்தால் பாஜகவை எதிர்த்திருப்பார் என்றும் குறிப்பிட்டிருந்தார். இதற்கு பதிலளித்த தமிழிசை, "கலைஞர் தானே பாஜகவுடன் கூட்டணி வைத்தார். கலைஞர் இன்று இருந்திருந்தால் பாஜகவை ஆதரித்து இருப்பார். கொள்கை வேறாக இருக்கலாம், கூட்டணி வைக்காமல் கூட இருக்கலாம், நட்பு ரீதியாக மத்திய அரசை நட்பாகப் பாராட்டலாம், அப்படிதான் கலைஞர் செய்திருப்பார். அதனால்தான் அவர் கூட்டணி வைத்தார்" என்று தனது கருத்தை முன்வைத்தார்.
ராகுல் காந்திக்கு பதிலடி: இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி
"‘பொருளாதாரம் இறந்து போய்விட்டது’ என்று டிரம்ப் சொன்னது போன்று மக்களை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் கூறினார். தேர்தல் கமிஷன் செத்துப்போய்விட்டது என்று சொல்கிறார். முதலில் காங்கிரஸ் எங்கு உயிரோடு இருக்கிறது என்று சொல்லட்டும். இந்தியாவில் பொருளாதாரம் வேகமாக வளர்ந்துகொண்டிருக்கிறது. 57% மக்கள் மத்திய அரசு திட்டங்களால் பயன் பெற்று இருக்கிறார்கள். 30 கோடி மக்கள் வறுமைக் கோட்டின் கீழிருந்து மேலே வந்திருக்கிறார்கள்" என்று ராகுல் காந்தியின் கருத்துக்களுக்கு தமிழிசை சௌந்தரராஜன் பதிலடி கொடுத்தார்.
ஓபிஎஸ் - நயினார் நாகேந்திரன் விவகாரம்
நயினார் நாகேந்திரன் தனது செல்போன் அழைப்பை ஏற்கவில்லை என ஓ.பன்னீர்செல்வம் முன்வைத்த குற்றச்சாட்டு குறித்துக் கேட்கப்பட்ட கேள்விக்கு, "இது தொடர்பாக நான் கருத்து சொல்ல விரும்பவில்லை. ஓ.பன்னீர்செல்வம் - நயினார் நாகேந்திரன் இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. தலைவர்கள் போய் சொல்வதில்லை.
ஆனால், நயினார் நாகேந்திரனை குற்றம் சொல்வதை பாஜகவைச் சேர்ந்த நாங்கள் ஏற்றுக்கொள்ளமாட்டோம். ஏதாவது கருத்து மோதல் இருந்தால் ஓ.பன்னீர்செல்வம் வெளிப்படையாகவே சொல்லியிருக்கலாம். ஓ.பன்னீர்செல்வம் சற்று நிதானமாக செயல்பட்டு தனது அரசியல் நகர்வுகளில் ஈடுபட்டு இருக்கலாம்" என்று தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.