கரூர் பிரசாரக் கூட்ட நெரிசலில் 40 பேர் உயிரிழந்த துயரச் சம்பவத்துக்கு நடிகர் விஜய்யின் பொறுப்பற்ற அரசியலே அடிப்படை காரணம் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் ஆளூர் ஷா நவாஸ் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்துத் தனது 'எக்ஸ்' பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், கரூர் தவெக பரப்புரைக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் பலியாகி இருப்பது அதிர்ச்சியும் வேதனையும் அளிப்பதாகத் தெரிவித்து ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளார்.
விஜய்யின் பொறுப்பற்ற அரசியலும் ஒழுங்கீனமும்
"இத்தகைய துயர நிலைக்கு அடிப்படை காரணமே விஜய்யின் பொறுப்பற்ற அரசியலாகும். விஜய்க்கு அதிகம் கூட்டம் கூடுகிறது என்பதால் தான் அதை முறைப்படுத்த காவல்துறையும் கட்டுப்பாடுகளை விதிக்கிறது. அதை அரசியல் பழிவாங்கலாகச் சித்தரித்தார் விஜய். அவருக்கு ஆதரவாகப் பேசும் மூத்த பத்திரிகையாளர்களும் கூட, கட்டுப்பாடுகளை விஜய் மீற வேண்டும் என்று உசுப்பிவிட்டனர். எனவே, விஜய் தொண்டர்களிடம் காவல்துறை கட்டுப்பாடுகள் மீது எதிர்மறை எண்ணம் வலுத்து, அவற்றை அவர்கள் பின்பற்றாத நிலையும் உருவானது" என்று ஷா நவாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
எந்த அரசியல் கட்சிகள் கூட்டம் நடத்தினாலும் அங்கு கூடுவோருக்கு அந்தக் கட்சிகள் தான் பொறுப்பு ஏற்கின்றன. நீதிமன்றமும் இதைக் கூறியுள்ள நிலையில், தவெக தரப்பில் செய்யப்பட்ட விதிமீறல்களை அவர் அடுக்கினார்: "குறிப்பிட்ட நேரத்திற்குக் குறுகிய இடம் மற்றும் அனுமதிக்கப்பட்ட அளவை மீறி பல மணி நேரம் தாமதமாக விஜய் வந்தது, உணவு தண்ணீர் இன்றி அங்கு மக்கள் தவித்தது, நீதிமன்ற உத்தரவை மீறி குழந்தைகளுடன் வந்தது, ஜெனரேட்டர் பகுதியை சூறையாடியது, காப்பாற்ற வந்த ஆம்புலன்சை தாக்கியது என்று முழுக்க முழுக்க ஒழுங்கீனமும் விதிமீறலும் செய்துள்ளது தவெக."
துயரத்திலும் ஒளிந்த நிர்வாகம்
துயரம் நடந்த பிறகு கட்சி நிர்வாகிகள் நடந்துகொண்ட விதத்தை அவர் கடுமையாகச் சாடினார். "துயரம் நடந்துவிட்ட பிறகும் கூட, தன் தொண்டர்களை மீட்கவோ காக்கவோ களத்தில் நிற்காமல் விஜய் உட்பட மொத்த கட்சி நிர்வாகமும் ஓடிப்போய் ஒளிந்தது அரசியல் அரங்கில் இதுவரை நாம் காணாத அவலம். சட்டம் ஒழுங்கிற்குப் பொறுப்பான முதலமைச்சர் உடனே கரூர் விரைகிறார். கூட்டத்தைக் கூட்டிய விஜய் மறுநொடியே சென்னை வீட்டிற்கு விரைகிறார்," என்று அவர் விமர்சித்தார்.
"அரசியல் என்பது ஒவ்வொரு நாளும் நடத்த வேண்டிய வேள்வி. நெருக்கடிகளையும் சவால்களையும் துயரங்களையும் எதிர்கொள்வதே அரசியல். அந்தத் துணிவு சிறுதும் இல்லாத விஜய்க்கு எதற்கு அரசியல்?" என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.