தமிழ்நாடு

சென்னையில் 8 விமானங்கள் திடீரென ரத்து.. பயணிகள் அவதி!

சென்னையில் இருந்து திருச்சி, தூத்துக்குடி, மதுரை, ஆகிய நகரங்களுக்கு செல்லும் 8 விமானங்கள் முன் அறிவிப்பு இல்லாமல் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளதால், பயணிகள் அவதியடைந்தனர்.

சென்னையில் 8 விமானங்கள் திடீரென ரத்து.. பயணிகள் அவதி!
சென்னையில் 8 விமானங்கள் திடீரென ரத்து.. பயணிகள் அவதி!
சென்னை விமான நிலையத்தில் இருந்து திருச்சிக்கு காலை 11.15 மணிக்கு செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், பகல் 12 மணிக்கு, தூத்துக்குடி செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், பிற்பகல் 2.10 மணிக்கு, கர்நாடக மாநிலம் சிவமொகா செல்லும் ஸ்பைஸ் ஜெட் ஏர்லைன்ஸ் விமானம், பிற்பகல் 2.25 மணிக்கு, சென்னையில் இருந்து மதுரை செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் ஆகிய 4 விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளன.

அதைப்போல் சென்னைக்கு பகல் 1.10 மணிக்கு கர்நாடக மாநிலம் சிவமொகாவிலிருந்து வரும் ஸ்பைஜெட் ஏர்லைன்ஸ் விமானம், பிற்பகல் 2 மணிக்கு, திருச்சியில் இருந்து சென்னை வரும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், மாலை 3.25 மணிக்கு, தூத்துக்குடியில் இருந்து வரும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், மாலை 5.40 மணிக்கு மதுரையிலிருந்து வரும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் ஆகிய 4 வருகை விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

சென்னை விமான நிலையத்தில் இருந்து வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களுக்கு புறப்படும் விமானங்கள் மற்றும் மற்ற விமான நிலையத்திலிருந்து சென்னைக்கு வரும் விமான நிலையங்கள் என 8 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த விமானங்கள் நிர்வாக காரணங்களுக்காக ரத்து செய்யப்பட்டவும்
இது குறித்து பயணிகளுக்கு முன் கூட்டியே தகவல் தெரிவிக்கப்பட்டு மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

4 புறப்பாடு விமானங்கள், 4 வருகை விமானங்கள் என மொத்தம் 8 விமானங்கள் திடீரென ரத்தால் பயணிகள் கடும் அவதி. முன்னதாக அறிவிப்பு எதுவும் செய்யப்படாமல், இன்று திடீரென விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பயணிகள் அவதியடைந்தனர்.