புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை தாலுகா அக்கச்சிப்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் முருகானந்தம் (45). இவரது பெற்றோரான ராஜகோபால்-காந்திமதி ஆகியோர் கந்தர்வகோட்டை பெரியகடைவீதி முக்கத்தில் கடந்த 60 ஆண்டுகளாக தேங்காய் விற்பனை கடை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
கடை தொடர்பாக பிரச்னை
கடந்த வாரம் வருவாய்த்துறை, உள்ளாட்சித்துறை, காவல்துறை உள்ளிட்ட அதிகாரிகள் இந்த கடையை ஆக்கிரமிப்பு நிலம் என்று கூறி அகற்ற சென்ற நிலையில், கந்தர்வகோட்டை வட்டாட்சியர் தலைமையிலான வருவாய்த்துறை அதிகாரிகள் அளந்து பார்த்தபோது, சம்பந்தப்பட்ட கடை ஊராட்சிக்கு சொந்தமான நிலம் அல்ல என்றும், எனவே இந்த கடையை அகற்ற வேண்டாம் என்றும் சொன்னதாக கூறப்படுகிறது.
அன்று இரவே அய்யாசெந்தில் என்பவரின் தூண்டுதலின்பேரில் அவரது தம்பி இளங்கோ மற்றும் அவரது அண்ணன் மகன் அருண் ஆகியோர் சேர்ந்து சம்பந்தப்பட்ட தேங்காய் கடையில் உள்ள தேங்காய், பணம் மற்ற பொருட்கள் உள்ளிட்டவற்றை டாடா ஏஸ் என்ற சிறிய ரக சரக்கு வாகனத்தின் மூலம் திருடி சென்றதாக கந்தர்வகோட்டை காவல் நிலையத்தில் புகார் அழைத்துள்ளனர்.
இலை போட்டு சாப்பிட்ட புகார்தாரர்
இந்த புகாரின் பேரில் கந்தர்வகோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளதாகவும், இருப்பினும் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்யவில்லை என்று கூறி கந்தர்வகோட்டை காவல் நிலையத்தில் 29-ஆம் தேதி காலை 5 மணி முதல் காத்திருந்ததாகவும், காவல்துறையினர் தங்களுக்கு பதில் ஏதும் கூறவில்லை என்ற காரணத்தை சுட்டிக்காட்டி காவல் நிலைய வாசலில் வாழை இலை போட்டு முருகானந்தம் என்பவர் குடும்பத்தினருடன் அமர்ந்து மதிய உணவை சாப்பிட துவங்கியுள்ளார்.
இதனை அங்கிருந்த போலீசார் சிலர் தடுத்த போதும் காலை முதல் காத்திருந்த தங்களுக்கு உரிய நீதி கிடைக்கவில்லை என்றும் அதனால் நீதி கிடைக்கும் வரை இங்கேயே காத்திருந்து போராட போவதாகவும் கூறி காவல் நிலைய வாசலில் வாழை இலை போட்டு மதிய உணவு இணையத்தில் சாப்பிட்ட வீடியோ வைரலாகி வருகிறது.