தமிழ்நாடு

பைக்கை வேகமாக ஓட்டியதை தட்டிக்கேட்டதால் ஆத்திரம்...இருவருக்கு அரிவாள் வெட்டு..வீடியோ வெளியாகி அதிர்ச்சி

இளைஞர்கள் இரண்டு நபர்களை வெட்டிவிட்டு கத்தியுடன் தப்பித்து செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.

 பைக்கை வேகமாக ஓட்டியதை தட்டிக்கேட்டதால் ஆத்திரம்...இருவருக்கு அரிவாள் வெட்டு..வீடியோ வெளியாகி அதிர்ச்சி
சென்னையில் பைக்கில் வேகமாக வந்ததை தட்டிக்கேட்டதால் இருவருக்கு அரிவாள் வெட்டு
சென்னை வியாசர்பாடி பி.வி காலனி பகுதியைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் ஆகாஷ் (27) மற்றும் அவருடைய நண்பர் அர்ஜுனன் (30) கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று வியாசர்பாடி பீலிகான் கோவில் தெரு பகுதியில் இரண்டு சக்கர வாகனங்கள் அதிவேகமாகச் சென்றுள்ளது.

இருவருக்கு சரமாரி அரிவாள் வெட்டு

அப்பொழுது சாலையில் நின்று கொண்டிருந்த அர்ஜுனன் எதற்காக வேகமாக ஓட்டுகிறீர்கள் எனக் கேள்வி எழுப்பியுள்ளார், அப்பொழுது அவருடன் வழக்கறிஞர் ஆகாஷும் இருந்துள்ளார். இதனை அடுத்து அந்த மர்ம நபர்கள் தகாத வார்த்தையால் பேசிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளனர்.

இதனை அடுத்து மதுபோதையில் இருந்த அந்த நபர்கள் மீண்டும் இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு கையில் நீண்ட அரிவாளுடன் ஆகாஷ் மற்றும் அர்ஜுனனை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பித்து சென்றுள்ளனர்.

உறவினர்கள் குற்றச்சாட்டு

தகவல் அறிந்த அக்கம் பக்கத்தினர் ரத்தக்காதத்துடன் இருந்தவர்களை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காகச் சேர்த்துள்ளனர். இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக எம்கேபி நகர் போலீசார் இரண்டு நபர்களை மட்டுமே கைது செய்திருப்பதாகவும், மீதமுள்ள நபர்களைக் கைது செய்யவில்லை எனவும் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.