தமிழ்நாடு

சென்னை வந்த சரக்கு விமானத்தின் இன்ஜினில் புகை வந்ததால் பரபரப்பு

கோலாலம்பூரிலிருந்து சென்னைக்கு வந்த சரக்கு விமானத்தில் இன்ஜினில் புகை வந்ததால் அதிகாரிகள் பதற்றம் அடைந்தனர்.

 சென்னை வந்த சரக்கு விமானத்தின் இன்ஜினில் புகை வந்ததால் பரபரப்பு
கோலாலம்பூரில் இருந்து சென்னை வந்த சரக்கு விமானத்தில் புகை வந்ததால் பரபரப்பு
மலேசியாவின் கோலாலம்பூரிலிருந்து சென்னைக்கு சரக்கு விமானம் அதிகாலை 3.30 மணி அளவில் வந்து கொண்டு இருந்தது. அப்போது விமானம் சென்னை விமான நிலைய ஓடுபாதையில் தரையிறங்கும்போது, இன்ஜினியிலிருந்து லேசாகப் புகை வந்ததால் உடனடியாகச் சரக்கு விமானத்தை ஓட்டி வந்த விமானி சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொண்டு விமானத்தில் இன்ஜினிலிருந்து புகை வருவதாகத் தகவல் தெரிவித்தார்.

சரக்கு விமானத்தில் புகை

உடனடியாகச் சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறையிலிருந்து விமான நிலையத்தில் உள்ள தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்து தீயணைப்பு வாகனம் ஓடுபாதை அருகே நிறுத்தப்பட்டது.

விமானம் தரையிறங்கியவுடன் விமானத்தில் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படாத வண்ணம் பாதுகாப்பாகச் சிலுவை வாகனம்மூலம் நடைமேடைக்கு இழுத்து வந்து நிறுத்தப்பட்டது .


5 பேர் உயிர் தப்பினர்

மேலும் இன்ஜினியிலிருந்து வந்த புகை தீயணைப்பு வாகனம்மூலம் தண்ணீரை பீச்சு அடித்து நிறுத்தப்பட்டது. இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து விமானத்தை ஓட்டி வந்த விமானி உட்பட ஐந்துக்கும் மேற்பட்டோர் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினர். இதனைத்தொடர்ந்து விமானத்தில் ஏற்றி வந்த சரக்குகளைப் பத்திரமாக இறக்கும் பணியும் நடைபெற்றது. இந்தச் சம்பவமானது அதிகாலை 3:30 மணியிலிருந்து 4 மணிக்குள் நடைபெற்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.