தமிழ்நாடு

ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக கருத்து- 3 இளைஞர்களை பிடித்து போலீஸ் விசாரணை

கோவை மாவட்டம் காரமடையில் தங்கி இருந்து வேலை செய்து வருவதும், தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அந்த 3 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர்.

 ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக கருத்து- 3 இளைஞர்களை பிடித்து போலீஸ் விசாரணை
பயங்ரவாத அமைப்புக்கு ஆதரவாக கருத்து தெரிவித்ததாக 3 இளைஞர்களை பிடித்து போலீஸ் விசாரணை
கோவை, கோட்டைமேடு பகுதியில் கடந்த 2022ஆம் ஆண்டுக் கார் வெடித்து ஜமேஷா முபின் என்பவர் உயிரிழந்தார். போலீசார் நடத்திய விசாரணையில் அவர் ஐ.எஸ் ஆதரவாளர் என்பது தெரியவந்தது.

பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக கருத்து

இந்தச் சம்பவம் தொடர்பாக மொத்தம் 17 பேரைத் தேசிய புலனாய்வு பிரிவு காவல் துறையினர் கைது செய்தனர். இதைத்தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அது போன்று ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாகச் செயல்படும் நபர்கள் தொடர்பாகவும் போலீசார் மற்றும் சிறப்பு புலனாய்வு பிரிவு எஸ்.ஐ.யு போலீசாரும் தீவிர கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில் சமூக வலைதளத்தில் ஐ.எஸ் அமைப்புக்கு ஆதரவாக மூன்று பேர் கருத்து தெரிவித்து இருப்பதை கோவை மாவட்ட சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் கண்டுபிடித்தனர்.

3 பேரை பிடித்து போலீஸ் விசாரணை

அவர்கள் எந்தப் பகுதியில் உள்ளனர். என்பது குறித்து விசாரணை நடத்தியதில், நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் கருத்து தெரிவித்து இருந்ததும், அவர்கள் கோவை மாவட்டம் காரமடையில் தங்கி இருந்து வேலை செய்து வருவதும், தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அந்த 3 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர்.

அதில் அவர்களுக்கு வந்த தகவலைச் சமூக வலைதளத்தில் பகிர்ந்ததாகத் தெரிவித்துள்ளனர். இதையடுத்து போலீசார் அந்த 3 பேரையும் எச்சரித்து அனுப்பி வைத்து உள்ளனர்.தொடர்ந்து மூன்று பேரின் நடவடிக்கையைப் போலீசார் கண்காணித்து வருவதுடன், வேறு யாருக்கும் ? இதில் தொடர்பு உள்ளதா ? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.