K U M U D A M   N E W S

கோவை

ஸ்டார்ட் அப் வளர்ச்சியில் தமிழ்நாடு முதலிடம் - அமைச்சர் அன்பரசன் பெருமிதம்!

புத்தொழில் நிறுவனங்களை (ஸ்டார்ட் அப்) ஊக்குவிப்பதில் தமிழ்நாடு முதலிடம் பெற்றுள்ளது என அமைச்சர் தா.மோ.அன்பரசன் பெருமிதம் தெரிவித்தார். அக். 9 மற்றும் 10 தேதிகளில் கோவையில் நடக்கும் உலகப் புத்தொழில் மாநாட்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

நீலகிரி, கோவைக்கு கனமழை; பிற மாவட்டங்களில் வெயில் சுட்டெரிக்கும் - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் தமிழகத்தில் நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் கனமழை பெய்யும். மற்ற மாவட்டங்களில் வெப்பநிலையும் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மருதமலை கோவிலில் நடிகர் யோகிபாபு சாமி தரிசனம்

நடிகர் யோகிபாபுடன் பக்தர்கள் புகைப்படம் மற்றும் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்

சுகுணா குழுமத்தில் வருமானவரித்துறை சோதனை- முக்கிய ஆவணங்கள் சிக்கியது?

சோதனையில் தங்கம், ரியல் எஸ்டேட் முதலீடு ஆவணங்கள் சிக்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது

ஜிஎஸ்டி 2.0 வரிக்குறைப்பு: கோவை வியாபாரிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி! நேரில் ஆய்வு செய்த வானதி சீனிவாசன்!

நாடு முழுவதும் ஜிஎஸ்டி 2.0 வரிக்குறைப்பு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதன் தாக்கம் குறித்து, கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினரும், பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவியுமான வானதி சீனிவாசன், பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளை நேரில் சந்தித்து ஆய்வு செய்தார்.

சென்னை திரும்பிய தனுஷை சூழ்ந்துக்கொண்ட ரசிகர்களால் பரபரப்பு

கோவையில் இருந்து தனி விமானத்தில் சென்னை திரும்பிய தனுஷ் ரசிகர்கள் சூழ்ந்து கொண்டு செல்ஃபி எடுத்தனர்.

என்னை விமர்சித்து சம்பாதிக்கிறார்கள்… KPY பாலா பேட்டி

என்னை விமர்சித்து சம்பாதிக்கிறார்கள், சந்தோசமாக இருந்தால் எனக்கும் சந்தோஷம் தான் என கோவையில் KPY பாலா பேட்டி

வடசென்னை-2 அடுத்த ஆண்டு வருது- தனுஷ் கொடுத்த அப்டேட்

‘இட்லி கடை’ ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் பரபரப்பு

கோவையில் தண்டவாளத்தில் குழந்தை உடல் கிடந்த சம்பவம் - 6 பேர் கைது

கோவையில் ரயில்வே தண்டவாளத்தில் குழந்தையின் உடல் கிடந்த சம்பவம் தொடர்பாக ஆறு பேரை ரயில்வே போலீசார் கைது செய்துள்ளனர்.

மோடிக்கு எதிராக தவறான தகவலை பரப்புகிறார் - ராகுல் காந்தி மீது வானதி சீனிவாசன் சாடல்

வளர்ச்சி அடைந்த பாரதத்திற்கான முக்கிய நடவடிக்கை ஜிஎஸ்டி வரி சீர்திருத்தம் உள்ளது என கோவையில் பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

முழு வீச்சில் கோவை மெட்ரோ, ரயில் நிலைய விரிவாக்கப் பணிகள்.. கூடுதல் ரயில்களை இயக்க முயற்சி!

கோவை மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாகவும், போத்தனூர் மற்றும் வடகோவை ரயில் நிலையங்களிலிருந்து கூடுதலாக ரயில்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ப. ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்ட வளர்ச்சிப் பணிகள் மந்தம்: முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி குற்றச்சாட்டு!

அ.தி.மு.க. திட்டங்களை முடக்கியது தி.மு.க. அரசு தான் என்று முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்.பி. வேலுமணி புகார் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை! சென்னையில் மிதமான மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் இன்று (ஆகஸ்ட் 17) நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

கோவையில் ரவுடி கும்பல் அட்டகாசம்: பட்டாக்கத்தியுடன் சுற்றித் திரிந்த ரவுடி கும்பல் கைது!

கோவை செட்டிபாளையத்தில் ஆயுதங்களுடன் சுற்றிய மதுரையைச் சேர்ந்த ரவுடிகள் போலீசாரால் கைது செய்யப்பட்ட நிலையில், இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக கருத்து- 3 இளைஞர்களை பிடித்து போலீஸ் விசாரணை

கோவை மாவட்டம் காரமடையில் தங்கி இருந்து வேலை செய்து வருவதும், தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அந்த 3 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர்.

கோவை – திருப்பூரில் ரூ.295 கோடியில் புதிய நலத்திட்டங்கள்.. இன்று தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர்!

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கல் மற்றும் பல்வேறு திட்டப்பணிகள் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கிவைக்கிறார்.

கோவை சி.எஸ்.ஐ சர்ச்சில் பரபரப்பு: வழக்கு தொடர்ந்த உதவி ஆயரை தடுத்த பவுன்சர்கள்!

கோவையில் சிஎஸ்ஐ சர்ச் பிஷப் மோசடி வழக்கில், வழக்கு தொடுத்த உதவி ஆயர் ஆலயத்திற்குள் நுழைய விடாமல் பவுன்சர்கள் தடுத்துள்ளனர் இதன் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன

கோவை செல்லும் முதல்வர் ஸ்டாலின்..பொள்ளாச்சியில் தலைவர்கள் சிலை நாளைத் திறப்பு!

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்றும் நாளையும் கோவை மற்றும் திருப்பூரில் கள ஆய்வு மேற்கொண்டு, கருணாநிதியின் சிலை மற்றும் பரம்பிக்குளம்-ஆழியாறு திட்டத் தலைவர்களின் சிலைகளைத் திறந்து வைக்கிறார்.

காவல் நிலையத்தில் கட்டிடத் தொழிலாளி தற்கொலை: நீதிபதி விசாரணை!

கோவையில் காவல் நிலையத்தில் கட்டிட தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் காவல் துறையினரிடம் நீதிபதி நேரில் விசாரணை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

கோவையில் 11 நாள் குழந்தை விற்பனை முயற்சி: இடைத்தரகர் கைது!

கோவை அரசு மருத்துவமனையில் பிறந்த 11 நாட்களே ஆன பெண் குழந்தையை விற்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தில் தொடர்புடைய இடைத்தரகர் ஆனந்தி சிந்து என்ற வீரம்மாளை (32) காவல்துறையினர் கைது செய்தனர்.

தமிழகத்தில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை.. நீலகிரி, கோவைக்கு ஆரஞ்சு அலர்ட்!

தமிழகத்தில் நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் மிகக் கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

உள்ளாட்சி சாலைப் பணி நிதியில் ரூ.78 லட்சம் மோசடி: தனியார் நிறுவன ஊழியர் கைது!

கோவை மாவட்டத்தில் உள்ளாட்சி சாலைப் பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் ரூ. 78 லட்சம் மோசடி செய்த தனியார் நிறுவன ஊழியர் ராஜன் கைது செய்யப்பட்டார்.

நீலகிரி, கோவைக்கு ரெட் அலர்ட்: மாவட்ட ஆட்சியர்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு!

தமிழகத்தில் அடுத்த சில நாள்களுக்குக் கனமழை மற்றும் அதி கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால், நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு வானிலை மையம் ரெட் அலர்ட் அறிவித்துள்ளது.

சான்றிதழ் வழங்க லஞ்சம்: தாசில்தார் உள்பட 2 பேர் பணியிடை நீக்கம்

கோவையில் சொத்து மதிப்பு சான்றிதழ் வழங்க லஞ்சம் பெற்ற வழக்கில் கைதான பேரூர் தாசில்தார் உள்பட இரண்டு பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

கோவை குற்றாலம் மூடல்.. சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்!

மழையின் காரணமாக கோவை குற்றாலம் அருவியில் நீர்வரத்து அதிகரித்து காணப்படுவதால், அருவியின் சுற்று வட்டாரப் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.