தமிழ்நாடு

தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை! சென்னையில் மிதமான மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் இன்று (ஆகஸ்ட் 17) நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

 தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை! சென்னையில் மிதமான மழைக்கு வாய்ப்பு!
தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை! சென்னையில் மிதமான மழைக்கு வாய்ப்பு!
தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்குக் கனமழை தொடரும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இன்று நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. கடந்த மாதம்வரை வெயில் வாட்டி வதைத்த நிலையில், ஆக்ஸ்ட் மாதத்தில் இருந்தே பரவலாக மழை பெய்து வருவதால், வெப்பம் தணிந்துள்ளது.

தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த சில மணி நேரத்திற்கு 16 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் மேற்கு பருவமழையின் தீவிரம் மற்றும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக இந்த மழைக்கு வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

இதன்படி, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 16 மாவட்டங்களில் இன்று பிற்பகல் 1 மணிவரை மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை ஆகஸ்ட் 18ஆம் தேதி வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 2025 ஆகஸ்ட் 17ஆம் தேதி முதல் 22ஆம் தேதிவரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். குறிப்பாக, 2025 ஆகஸ்ட் 17ஆம் தேதியான இன்று வட தமிழகம், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், இந்த மாவட்டங்களில் வெப்பம் தணிந்து, இதமான சூழல் நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், மீனவர்கள் கடலுக்குச் செல்லும்போது கவனமாக இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.