K U M U D A M   N E W S

கோவை

பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு....கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

பில்லூர் அணையின் பாதுகாப்பு கருதி வினாடிக்கு 14 ஆயிரம் கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுவதால் பவானியாற்றில் வெள்ளப்பெருக்கு; கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

ஷூவுக்குள் துப்பாக்கி தோட்டா...கோவை விமான நிலையத்தில் பரபரப்பு

ஷூவுக்குள் மறைத்து வைத்து கொண்டு எடுத்து வந்த துப்பாக்கி தோட்டாவை கோவை விமான நிலையத்தில் பறிமுதல் செய்து போலீஸ் விசாரணை

செல்போன் வாங்கி தர மறுத்த பெற்றோர்.. 11 ஆம் வகுப்பு மாணவனின் விபரீத முடிவு

செல்போன் வாங்கி தர பெற்றோர் மறுத்ததால், 11 ஆம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“கன்னட மொழி விரோதி கமல்ஹாசன்” –கோவையில் போஸ்டர் ஒட்டிய பாஜக

தமிழ் எங்கள் உயிர், கன்னடம் எங்கள் தாய்மொழி; கன்னட மொழி விரோதி கமல்ஹாசன் என கோவையில் பாஜக சார்பில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

விவசாயிகளுடன் வெங்காயம் நடவு செய்த கோவை கலெக்டர்!

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர் விவசாயிகளுடன் இணைந்து வெங்காயம் நடவு செய்தது அப்பகுதியில் பலரது கவனத்தையும், பாராட்டையும் பெற்றுள்ளது.

சிக்கன் குழம்பில் பல்லி.. உணவகத்தில் நாடகமாடிய 4 பேருக்கு போலீசார் வலை

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் இயங்கிவரும் உணவகத்தில் பரிமாறப்பட்ட சிக்கன் குழம்பில் பல்லி கிடந்ததாக நாடகமாடிய 4 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

டி.என்.பி.எல் கிரிக்கெட் போட்டி இன்று தொடக்கம்.. முதல் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் - கோவை கிங்ஸ் மோதல்

8 அணிகள் பங்கேற்கும் டி.என்.பி.எல் கிரிக்கெட் போட்டி கோவையில் இன்று தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான திண்டுக்கல் டிராகன்ஸ் மற்றும் கோவை கிங்ஸ் அணிகள் மோதுவதால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

வெள்ளிங்கிரி மலை ஏற இனி அனுமதி கிடையாது.. வனத்துறை அறிவிப்பு!

கோவை, வெள்ளியங்கிரி மலை ஏறி ஈசனை தரிசிக்க பக்தர்கள் இந்தாண்டு வனத் துறை வழங்கி இருந்த அனுமதி நேற்றுடன் நிறைவு பெற்றதை தொடர்ந்து, மலை ஏறுவதற்கு இனி அனுமதி வழங்கப்படாது என வனத்துறை அறிவித்துள்ளது.

கோவையில் கொரோனா பரவல் இல்லை - கல்லூரி முதல்வர் நிர்மலா விளக்கம்

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனோ பரவல் இல்லை என்றும், கட்டாய முக கவசம் என தவறான செய்தி குறித்து விசாரணை நடத்தப்படும் என முதல்வர் நிர்மலா விளக்கம் அளித்துள்ளார்.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு.. கோவை முன்னாள் ஆட்சியருக்கு அபராதம்!

கோவை மாவட்ட முன்னாள் ஆட்சியர் கிராந்தி குமார் பாடிக்கு நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ரூ.10,000 அபராதமும், கோவை வடக்கு தாலுகா தாசில்தார் மணிவேலுக்கு ஒரு மாதம் சிறை தண்டனையும் விதித்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக உரிமை விவகாரத்தில் முதலமைச்சர் சமரசம் செய்யமட்டார்- அமைச்சர் மனோ தங்கராஜ்

எப்போதும் நிரந்தரமான விலையை தரும் ஆவினுக்கு அனைத்து விவசாயிகளும் வர வேண்டும் என அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டியளித்துள்ளார்.

கோவையில் பாஜக நடத்திய தேசியக்கொடி பேரணி- அதிமுகவினர் பங்கேற்பு

ஆப்ரேஷன் சிந்து வெற்றியை கொண்டாடும் விதமாக கோவையில் பா.ஜ.க வினர் நடத்திய மூவர்ண கொடி பேரணியில் பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., அ.தி.மு.க ஜெயராமன் எம்.எல்.ஏ உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஐ.பி.எல் சூதாட்டம்: ஒருவர் கைது - ரூ.96 லட்சம் மதிப்புள்ள சொத்துகள் முடக்கம்!

கோவையில் ஐ.பி.எல் சூதாட்டத்தில் ஈடுபட்ட ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில், ரூ. 50 லட்சம் சொத்து, 46 லட்சம் வங்கி கணக்குகளை முடக்கி காவல் துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

காதலியிடம் வீடியோ காலில் பேசி வந்த நண்பன்.. போதை ஊசி செலுத்தி கொலை

தன் காதலியிடம் நண்பன் வீடியோ காலில் பேசி வந்ததால் ஆத்திரம் அடைந்த காதலன், நண்பனை மதுப்போதையில் போதை ஊசி செலுத்தி கொலை செய்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Pollachi Judgement: பொள்ளாச்சி வழக்கில் குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு விவரம்!

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகளான 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்கி, கோவை கூடுதல் மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினி தேவி தீர்ப்பளித்துள்ளார்.

பொள்ளாச்சி வழக்கு: 9 பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை...விஜய் வரவேற்பு

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகள் 9 பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது வரவேற்கத்தக்கது என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு...9 பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை...நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகள் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து கோவை மகளிர் நீதிமன்றம் பரப்பு தீர்ப்பளித்துள்ளது.

பொள்ளாச்சி வழக்கு...சாகும் வரை ஆயுள் தண்டனை...அரசு தரப்பு கோரிக்கை

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகளுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்க அரசு தரப்பு கோரிக்கை வைத்துள்ளது.

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்...கோவை மகளிர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் 9 பேரும் குற்றவாளிகள் என கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தண்டனை விவரம் மதியம் 12 மணிக்கு வெளியாகும் என அறிவிப்பு

“கல்வி மட்டுமே காப்பாற்றும்”- நீட் தேர்வு எழுதிய திருநங்கை நம்பிக்கை

கோவையில் 2வது முறையாக நீட் தேர்வு எழுதிய திருநங்கை, கல்வி ஒன்றே தங்களை எதிர்காலத்தில் காப்பாற்றும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்

'நான் யானை அல்ல.. குதிரை' செந்தில் பாலாஜி ஆதரவாளர்களின் போஸ்டர் யுத்தத்தால் பரபரப்பு!

கோவையில் செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கிய தமிழக அரசிற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது ஆதரவாளர்கள் ஒட்டியுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கோவை நீதிமன்றத்தில் பரபரப்பு.. குற்றவாளி தீர்ப்பிற்கு முன் தப்பியோட்டம்!

கோவையில் பரபரப்பை ஏற்படுத்திய வழிப்பறி மற்றும் கொலை முயற்சி வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி, நீதிமன்ற தீர்ப்புக்கு பயந்து தப்பியோடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Kovai | தீர்ப்புக்கு முன் தப்பியோடிய குற்றவாளி.. கோவையில் பரபரப்பு | Accused Escape in Coimbatore

Kovai | தீர்ப்புக்கு முன் தப்பியோடிய குற்றவாளி.. கோவையில் பரபரப்பு | Accused Escape in Coimbatore

விஜய் கோவை வருகை...த.வெ.க நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு

மொத்தம் 133 வாகனங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

தவெக பூத் கமிட்டி மாநாடு.. அனுமதியளிக்காததால் ஆத்திரமடைந்த தொண்டர்கள்.. கோவையில் பரபரப்பு

கோவையில் விஜய், ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் ஆத்திரத்தில் கல்லூரி வாயிலை அடித்து உடைத்து தவெக பூத் கமிட்டி மாநாட்டிற்குள் நுழைய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.