#JUSTIN: பாலியல் சீண்டல் - விடுதி உரிமையாளருக்கு தர்மஅடி
கோவை பீளமேட்டில் உள்ள தனியார் மகளிர் தங்கும் விடுதியில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு. புகாரின் அடிப்படையில் ராஜ்குமார் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை
கோவை பீளமேட்டில் உள்ள தனியார் மகளிர் தங்கும் விடுதியில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு. புகாரின் அடிப்படையில் ராஜ்குமார் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை
கோவை மாவட்டம் உக்கடம் கேஸ் பங்க்-ல் கேஸ் நிரப்புவதற்காக வந்த ஆம்னி கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. காரில் கேஸ் நிரப்பியபோது எதிர்பாராத விதமாக கேஸ் கசிவு ஏற்பட்டதால் தீப்பிடித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
கோவை ஆர்.எஸ் புரம் கிழக்கு சம்பந்தம் சாலையில் உணவக உரிமையாளர் வீட்டில் 60 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. பட்டப்பகலில் 2 பேர் ஹெல்மெட் அணிந்து வந்து கொள்ளையடித்த சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
கோவை மாநகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு போன்ஸ் வழங்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது
கோவை மாவட்டம் வால்பாறை அருகே சிறுமியை தாக்கிக் கொன்ற சிறுத்தையை பிடிக்க நடவடிக்கை. சிறுத்தை நடமாட்டத்தை 12 சிசிடிவிக்கள் பொருத்தி வனத்துறை கண்காணிப்பு
கோவை மாவட்டம் வால்பாறை ஊசிமலை மட்டம் எஸ்டேட் பகுதியில் சிறுத்தை தாக்கி 4 வயது சிறுமி உயிரிழப்பு.
கோவையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் ரூ.90 லட்சத்தில் ஆராய்ச்சி பூங்கா அமைக்க டெண்டர் கோரியது தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகம்
கோவை சிறுவாணி அணையின் மொத்த கொள்ளளவான 44.61 அடியில் தற்போது நீர்மட்டம் 43.56 அடியாக உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கோவை மாவட்ட ஆட்சியரின் வாகனம் முன்பு பெண் ஒருவர் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்ததால் பரபரப்பு.
கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை... தயார் நிலையில் தீயணைப்பு வீரர்கள்
கோவை மாவட்டத்தில் பள்ளிகள் இன்று மதியம் வரை மட்டுமே செயல்படும் - ஆட்சியர் அறிவிப்பு
கோவையில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் சோதனையில் ஈடுபட்டனர்.
பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை – கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தல்
Wild Elephant Attack in Coimbatore : கோவை தொண்டாமுத்தூர் அருகே நரசிபுரம் கிராமத்தில் காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு.
TN Rain Update: உள் தமிழக பகுதிகளில் மேல் நிலவும் வலிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கோவை, திருப்பூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் கனமழை பெய்தது.
கோவை வனப்பகுதிகளில் சட்டவிரோதமாக செயல்படும் செங்கல் சூளைக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்காத மாவட்ட நிர்வாகம் மீது சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் பரவல் எதிரொலியாக கோவை - கேரள எல்லையில் சுகாதாரத்துறை சார்பில் எல்லை பகுதிகளில் முகாமிட்டு சோதனை நடத்தி வருகின்றனர்.
கடந்த மூன்று ஆண்டுகளில் திமுக அரசு கோவை மாவட்டத்திற்கு செய்த நலத்திட்டங்களை மேடை போட்டு விவாதிக்க தயாரா என அதிமுக சார்பில் நடைபெற்ற அண்ணா பிறந்தநாள் பொது கூட்ட நிகழ்வில் ஆவேசமாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரையாற்றினார்.
பிரபல ரவுடி ஆல்வின் மீது போலீசார் துப்பாக்கியால் 3 ரவுண்டுகள் சுட்டதில், இரு கால்களிலும் குண்டு பாய்ந்து காயம் ஏற்பட்டதை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
கோவை மாநகர பகுதியில் அனுமதியின்றி செயல்பட்டதாக 57 மசாஜ் செண்டர்கள் மற்றும் ஸ்பாக்கள் கடந்த 5 நாட்களில் மூடப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
Onam Festival 2024 Celebration in Coimbatore : கோவை தனியார் கல்லூரியில் நடைபெற்ற ஓணம் பண்டிகைக்கு ஹெலிகாப்டரில் வந்திறங்கிய மகாபலி மன்னர். செண்டை மேளம் முழங்க மாணவ, மாணவிகள் உற்சாக நடனம்...
கோவையில் தொழில்துறையினருடன் நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் ஜி.எஸ்.டி. வரி விதிப்பு தொடர்பாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம், ஸ்ரீ அன்னபூர்ணா உணவகத்தின் நிர்வாக இயக்குநர் சீனிவாசன் புலம்பிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
குமுதம் வார இதழ், கிங் மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி இணைந்து நடத்திய வாகை சூடவா நிகழ்ச்சி கோவையில் நடந்தது.