காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகிலுள்ள நெல்லுக்காரத் தெருவில், அருள்மிகு சித்ரகுப்த சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. தென் இந்தியாவிலேயே சித்ரகுப்த கோவிலுக்கு தனி சன்னதி கொண்டுள்ள திருக்கோயிலாக விளங்கி வரும் இக்கோயிலில் சித்ரா பெளர்ணமி அன்று பல லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் மேற்கொள்வர்.
இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இத் திருக்கோயிலில் வெளியே உள்ள தேங்காய் பூ பழம் விற்பனை செய்யும் கடையானது ஒவ்வொரு ஆண்டும் ஏலம் விடப்படுவது வழக்கம். அந்த வகையில், இவ்வாண்டுக்கான பொது ஏலம் மற்றும் டெண்டர் திறப்பு திருக்கோயில் வளாகத்தில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் முன்னிலையில் இன்று நடைபெற்றது.
ஏல டெபாசிட் தொகையாக ரூ.1 லட்சத்தை திருக்கோயில் பெயரில் வரைவோலையாக செலுத்தி பொது ஏலத்தில் ஏராளமான ஏலம் கோருபவர்கள் பங்குபெற்ற நிலையில் ரூ. 21 லட்சத்தில் இருந்து ஏலமானது துவங்கியது. இந்நிலையில் ஏலதாரர்கள் ஒருவொருக்கொருவர் போட்டி போட்டுக்கொண்டு ஏலத்தை தொகையினை அதிகரித்து கொண்டே சென்ற நிலையில் இறுதியாக 24 லட்சத்து 94 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் கேட்ட ராமச்சந்திரன் என்பவருக்கு யாரும் அதற்கு மேல் கேட்காததால் அவருக்கே ஏலம் போனது.
இதில் ஏலத் தொகையாக ரூ.24 லட்சத்து 94 ஆயிரத்திற்கு, ஜி.எஸ்.டியாக 18 சதவிகிதமான ரூ. 4 லட்சத்து 48 ஆயிரத்து 920 என மொத்தமாக 24 லட்சத்து 42ஆயிரத்து 920 ரூபாய் என சுமார் 30லட்சத்துக்கு இக்கடையானது ஏலம் போய் உள்ளது.
ஏலம் முடிவுற்ற நிலையில் டெண்டர் பெட்டியை அதிகாரிகள் திறந்த நிலையில், அதில் எவ்வித டெண்டரும் இல்லாமல் டெண்டர் பெட்டி காலியாகவே காட்சியளித்தது. இதன் பின்பு ஏலம் எடுத்த ராமச்சந்திரன் இக்கடையினை ஏலம் எடுத்ததற்க்கான கையெடு புத்தகத்தில் கையெழுத்த்திட்டு இவ்வாண்டிற்கான தேங்காய் பூ பழம் விற்பனை செய்யும் உரிமத்தை பெற்றார்.
இரு ஆண்டுக்கு முன்னர் வெறும் ரூ. 7 லட்சமும், சென்ற ஆண்டு ரூ. 21 லட்சத்தும் ஏலம் போன கடையானது இவ்வாண்டு சுமார் 30லட்சத்துக்கு ஏலம் போய்யுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.