சென்னை கொடுங்கையூர் பகுதியைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் எம்.எல்.பிரபு. இவர் தமிழக வெற்றிக் கழகத்தில் உறுப்பினர் சேர்க்கை அணியின் உறுப்பினராக முதலில் பணியாற்றி வந்தார்.
விஜய் நற்பணி இயக்கம் துவங்கப்பட்ட காலத்தில் இருந்து அவர் பணியாற்றி வருவதாக தெரியவருகிறது.
தவெகவில் பொறுப்பு
மாதவரத்தைச் சேர்ந்த இளங்கோவன், பாலமுருகன், நரேஷ் ஆகியோர் விஜய் மக்கள் இயக்கத்தில் நீண்ட காலமாக உறுப்பினராக இருந்து வந்த நிலையில் நரேஷ் என்பவர் இறந்துவிட்டதாகவும், விஜய் தமிழக வெற்றிக் கழகம் கட்சியை ஆரம்பித்து நிர்வாகிகளை நியமித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் பாலமுருகன் என்பவர் மதுரவாயல் பகுதியில் கட்சியில் பொறுப்பு பெற்றுக்கொண்டதாகவும், இளங்கோவன் தனக்கு தான் திருவள்ளூர் தென்மேற்கு மாவட்ட கழக செயலாளர் பொறுப்பு கிடைக்கும் என்று நம்பிக்கையில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் பெரம்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் வசித்து வரும் பிரபு என்பவர் செல்வாக்கு மிக்கவராக இருந்து வந்ததால் திருவள்ளுர் தென்மேற்கு மாவட்ட கழக செயலாளராகவும், இளங்கோவன் திருவள்ளுர் தென்மேற்கு மாவட்ட கழக இணைச் செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
கொலை மிரட்டல் புகார்
மாவட்ட செயலாளர் பொறுப்பு வழங்கப்படாமல், இளங்கோவுக்கு கட்சியில் மதிப்பதில்லை என்றும் கட்சி நிகழ்ச்சிகளில் அழைப்பதில்லை என்பதால் இளங்கோ தூண்டுதலின்பேரில் பிரபுவுக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தகாத வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக தெரியவருகிறது. நேற்று இரவு மூன்று பேரை அழைத்துக்கொண்டு இளங்கோ சென்னை கொடுங்கையூர் முத்தமிழ் நகரில் வசித்து வரும் வழக்கறிஞர் எம்.எல். பிரபு வீட்டிற்கு சென்று நள்ளிரவு நேரத்தில் வீட்டுக்கு வெளியே அழைத்து அவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இவை அனைத்தும் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. அதோடு தொலைபேசியில் இளங்கோ பிரபுவிற்கு கொலை மிரட்டல் விடுத்த ஆடியோ பதிவையும் எம்எல் பிரபு கொடுகையூர் காவல் நிலையத்தில் புகாரின்போது அளித்துள்ளார். இதனைத்தொடர்ந்து மாவட்ட செயலாளரும், வழக்கறிஞருமான பிரபு கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த சென்னை கொடுங்கையூர் காவல்துறையினர் மாதவரம் இளங்கோ மற்றும் ரவுடி ரஞ்சித், ஆனந்தபாபு, சாலமன் (எ) விக்னேஷ்வரன் ஆகிய நான்கு பேர் மீது கொலை மிரட்டல் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.
தவெக நிர்வாகி உட்பட 4 பேர் கைது
கைது செய்யப்பட்ட நால்வரையும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க கொடுங்கையூர் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். தமிழக வெற்றிக் கழகத்தில் பொறுப்பு வழங்கியதில், கட்சிக்காக உழைத்தவர்களுக்கு வழங்கப்படாமல் மற்றவர்களுக்கு வழங்கப்படுவதால் தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகள் தொடர்ந்து நிலவிக்கொண்டிருக்கும் நிலையில், பொறுப்பு வழங்கிய விவகாரம் தொடர்பாக தமிழக வெற்றிக்கழக நிர்வாகி மற்றொரு நிர்வாகியை கூலிப்படை வைத்து கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.