தமிழ்நாடு

டிஜிபி சங்கர் ஜிவால் ஓய்வு: தீ ஆணையத்தின் தலைவராக நியமனம்; புதிய டிஜிபி யார்?

தமிழக காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால் வரும் ஆகஸ்ட் 31 அன்று ஓய்வு பெறவுள்ள நிலையில், தமிழக அரசால் புதிதாக உருவாக்கப்பட்ட 'தீ ஆணையத்தின் தலைவராக' அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

டிஜிபி சங்கர் ஜிவால் ஓய்வு: தீ ஆணையத்தின் தலைவராக நியமனம்; புதிய டிஜிபி யார்?
டிஜிபி சங்கர் ஜிவால் ஓய்வு: தீ ஆணையத்தின் தலைவராக நியமனம்; புதிய டிஜிபி யார்?
தமிழக காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால், வரும் ஆகஸ்ட் 31, 2025 அன்று ஓய்வு பெறுகிறார். இந்நிலையில், தமிழக அரசால் புதிதாக உருவாக்கப்பட்ட 'தீ ஆணையத்தின் தலைவராக' அவர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்தப் புதிய பொறுப்பை ஏற்றுக்கொண்டதை அடுத்து, அவர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினைச் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

யார் இந்தச் சங்கர் ஜிவால்?

உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சங்கர் ஜிவால், டெல்லியில் பட்டப்படிப்பை முடித்து, யூபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்று தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரியாகப் பணியில் சேர்ந்தார். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் காவல் கண்காணிப்பாளராகப் பணியாற்றிய இவர், 2023-ஆம் ஆண்டு தமிழகத்தின் டிஜிபியாக நியமிக்கப்பட்டார். அதற்கு முன்பு சென்னை மாநகர காவல் ஆணையராகவும் இவர் பணியாற்றியுள்ளார்.

பிரிவு உபசார விழா

தமிழக சட்ட ஒழுங்கு டிஜிபி சங்கர் ஜிவால் வரும் 31 ஆம் தேதி ஓய்வுபெற உள்ளார். அதேபோல் தமிழ்நாடு காவல்துறை வீட்டு வசதி வாரியத் தலைவர் டிஜிபி சைலேஷ் குமார் யாதவ் ஓய்வு பெற உள்ளார். இருவருக்கும் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் தமிழக காவல்துறையால் பிரிவு உபசார விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேசிய டிஜிபி சங்கர் ஜிவால், நான் முதல்வருக்கு இந்த வாய்ப்பை அளித்ததற்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். சென்னை யில் காவல் ஆணையராகவும், இந்தியாவின் சிறந்த மாநிலமான தமிழகத்தின் காவல்துறை தலைமை ஏற்க வாய்ப்பு அளித்ததற்கு நன்றி தெரிவித்த அவர், தொடர்ந்து அவருடைய ஓட்டுனர்கள், பாதுகாப்புகாவலர் உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், சென்னை காவல் ஆணையருக்கும் , சீனியர் ப்ரமோத் குமாருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

அடுத்த டிஜிபி குறித்த எதிர்பார்ப்பு

சங்கர் ஜிவால் ஓய்வு பெறும் நிலையில், அடுத்த தமிழக டிஜிபி யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள் பட்டியலில் சந்தீப்ராய் ரத்தோர், சீமா அகர்வால், வெங்கட்ராமன் ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.

தற்போது நிர்வாகத் துறை டிஜிபியாகப் பணியாற்றி வரும் ஜி. வெங்கட்ராமன், அடுத்த டிஜிபியாக நியமிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 1994-ஆம் ஆண்டு யூபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்ற இவர், சிபிசிஐடி கூடுதல் டிஜிபி உள்ளிட்ட பல முக்கியப் பொறுப்புகளை வகித்துள்ளார்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை வெளிநாடு செல்ல உள்ளதால், அதற்கு முன்னதாகவே புதிய டிஜிபி குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகலாமென எதிர்பார்க்கப்படுகிறது.