சென்னையில் இன்று தங்கம் விலை முன்னெப்போதும் இல்லாத வகையில் ஒரு மிகப்பெரிய உயர்வை சந்தித்துள்ளது. நேற்று மாலை வரை ஓரளவு ஏற்ற இறக்கத்துடன் இருந்த விலை, இன்று காலை வர்த்தகம் தொடங்கிய சில மணிநேரங்களிலேயே புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
தலைசுற்ற வைக்கும் இன்றைய விலை நிலவரம்
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 9,520 கூடி, ஒரு சவரன் ரூ. 1,34,400-க்கு விற்பனையாகிறது. கிராம் கணக்கில் பார்த்தால், ஒரு கிராம் தங்கம் ரூ. 1,190 உயர்ந்து ரூ. 16,800 என்ற இமாலய விலையை எட்டியுள்ளது. கடந்த இரண்டு நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 14,720 உயர்ந்துள்ளது சாமானிய மக்களைப் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
வெள்ளி விலையிலும் அதிரடி மாற்றம்
தங்கத்தின் விலையேற்றத்திற்கு ஈடுகொடுக்கும் வகையில் வெள்ளி விலையும் இன்று புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. வெள்ளியும் கிராமுக்கு ரூ.25 உயர்ந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.425 விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ,4,25,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கலக்கத்தில் நகைப்பிரியர்கள்
தங்கம் விலை ஒரு கிராம் 16 ஆயிரம் ரூபாயைத் தாண்டியுள்ளதால், திருமண விசேஷங்களுக்காக நகை வாங்கக் காத்திருந்த நடுத்தரக் குடும்பங்கள் பெரும் கவலையில் உள்ளனர். "தங்கம் என்பது இனி எட்டாக்கனிதான்" என்று கூறும் அளவிற்கு அதன் விலை உயர்வு மிரள வைக்கிறது. வரும் நாட்களில் விலை இன்னும் உயருமா அல்லது குறையுமா என்பது குறித்த குழப்பம் சந்தையில் நிலவி வருகிறது.

LIVE 24 X 7