2025 ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி, ஜெர்சி ஸ்பான்சர் இல்லாமல் விளையாட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மத்திய அரசு சமீபத்தில் அமல்படுத்திய ஆன்லைன் சூதாட்டத் தடைச் சட்டம் காரணமாக, இந்திய அணியின் டைட்டில் ஸ்பான்சராக இருந்த ட்ரீம் 11 நிறுவனத்துடனான ஒப்பந்தம் முடிவுக்கு வந்ததே இதற்கு முக்கியக் காரணம்.
ரூ. 358 கோடி ஒப்பந்தம் ரத்து
ஆன்லைன் ஃபேண்டஸி விளையாட்டு நிறுவனமான ட்ரீம் 11, இந்திய அணியின் ஜெர்சி ஸ்பான்சராகச் சுமார் ரூ. 358 கோடிக்கு ஒப்பந்தம் செய்திருந்தது. ஒரு சர்வதேச போட்டிக்கு ரூ. 1.20 கோடி என்ற அடிப்படையில் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. ஆனால், மத்திய அரசு சமீபத்தில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு எதிராகக் கடுமையான சட்டங்களை இயற்றி, அதனை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. இதனால் ஏற்பட்ட சட்டச் சிக்கல்களைத் தவிர்க்க, ட்ரீம் 11 நிறுவனம் இந்திய அணியின் டைட்டில் ஸ்பான்சர் பொறுப்பிலிருந்து விலகுவதாகத் தெரிவித்துள்ளது.
புதிய ஸ்பான்சர் தேடும் பிசிசிஐ
ட்ரீம் 11 நிறுவனத்தின் இந்தத் திடீர் விலகலைத் தொடர்ந்து, புதிய டைட்டில் ஸ்பான்சரைத் தேடும் பணியில் பிசிசிஐ தீவிரமாக ஈடுபட்டுள்ளது. பிசிசிஐயின் இடைக்காலத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ராஜீவ் சுக்லா தலைமையில், ஆகஸ்ட் 28-ஆம் தேதி அவசரக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், புதிய ஸ்பான்சரைக் கண்டறிவது குறித்து விவாதிக்கப்பட்டது.
அதே சமயம், இந்தச் செயல்முறைக்கு அதிக நேரம் தேவைப்படும் எனத் தெரிகிறது. குறிப்பாக, புதிய ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தம் 2027 ஒருநாள் உலகக் கோப்பைவரை நீடிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அவசரமாக முடிவெடுப்பது சவாலானது.
வரும் செப்டம்பர் 9-ஆம் தேதி ஆசிய கோப்பை தொடங்குவதால், புதிய ஸ்பான்சருக்கான ஒப்பந்தம் சரியான நேரத்தில் செய்யப்படாமல் போக வாய்ப்புள்ளது. இதன் காரணமாக, இந்திய வீரர்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் ஜெர்சியில் எந்தவொரு ஸ்பான்சர் லோகோவும் இல்லாமல் களமிறங்க வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.