தமிழ்நாடு

ஓட்டுநருக்கு ஏற்பட்ட திடீர் வலிப்பு.. கட்டுப்பாட்டை இழந்த பேருந்து ஆட்டோக்கள் மீது மோதி விபத்து!

சென்னையில் மாநகரப் பேருந்து ஓட்டுநருக்கு ஏற்பட்ட திடீர் வலிப்பு காரணமாக, பேருந்து சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு ஆட்டோக்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது.

ஓட்டுநருக்கு ஏற்பட்ட திடீர் வலிப்பு.. கட்டுப்பாட்டை இழந்த பேருந்து ஆட்டோக்கள் மீது மோதி விபத்து!
Bus Driver Has Seizure, Crashes Into Autos at Marina Beach
மெரினா கடற்கரை சாலையில் மாநகரப் பேருந்து ஓட்டுநருக்கு ஏற்பட்ட திடீர் வலிப்பு காரணமாக, பேருந்து சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு ஆட்டோக்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்தச் சம்பவத்தில் மூன்று ஆட்டோ ஓட்டுநர்கள் காயமடைந்தனர்.

ஓட்டுநருக்கு திடீர் வலிப்பு

கவியரசு கண்ணதாசன் நகரில் இருந்து அண்ணாசதுக்கம் வரை செல்லும் 2A தடம் எண் கொண்ட மாநகரப் பேருந்தை ஓட்டுநர் மோகன் இயக்கி வந்துள்ளார். அண்ணாசதுக்கத்தில் இருந்து மீண்டும் கவியரசு கண்ணதாசன் நகருக்குப் புறப்பட்ட சிறிது நேரத்தில், மெரினா கடற்கரை பேருந்து நிலையத்தில் பேருந்தை நிறுத்தும்போது ஓட்டுநர் மோகனுக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டுள்ளது.

ஆட்டோ மீது மோதல் - 3 பேர் காயம்

இதனால் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த இரண்டு ஆட்டோக்கள் மீது மோதியது. இதில் ஆட்டோக்கள் முற்றிலும் சேதமடைந்தன. விபத்தில் காயமடைந்த மூன்று ஆட்டோ ஓட்டுநர்களும், பேருந்து ஓட்டுநரும் 108 ஆம்புலன்ஸ் மூலம் உடனடியாகச் சென்னை அரசு ராஜீவ் காந்தி பொது மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்தச் சம்பவம் குறித்து அண்ணாசதுக்கம் போக்குவரத்துப் புலனாய்வு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.