தமிழ்நாடு

சிறார்கள் பாதுகாப்பு: அரசு மற்றும் தனியார் பராமரிப்பு இல்லங்களில் கண்காணிப்பு தீவிரம்!

அரசு மற்றும் தனியார் சிறார்கள் பராமரிப்பு இல்லங்களில், பாலியல் வன்கொடுமை சம்பவங்களை தவிர்க்க, தாம்பரம் மாநகர காவல்துறை, கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது.

சிறார்கள் பாதுகாப்பு: அரசு மற்றும் தனியார் பராமரிப்பு இல்லங்களில் கண்காணிப்பு தீவிரம்!
சிறார்கள் பாதுகாப்பு: அரசு மற்றும் தனியார் பராமரிப்பு இல்லங்களில் கண்காணிப்பு தீவிரம்!
குழந்தைகள் பராமரிப்பு இல்லங்களிள், அங்கு பணிபுரியும், ஊழியர்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்படும் சம்பவம் முற்றிலும் தவிர்க்க தாம்பரம் மாநகர காவல்துறை. தங்கள் அதிகார வரம்பிற்குட்பட்ட அனைத்து பாதுகாப்பு இல்லங்களிலும், கண்காணிப்பையும் மற்றும் பாதுகாப்பையும் மேம்படுத்த தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

இத்தகைய இல்லங்களில் வசிக்கும் சிறார்கள் மற்றும் பாதிக்கப்படக்கூடிய நபர்களின் பாதுகாப்பையும், கண்ணியத்தையும் பாதுகாக்க வலுவான முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளின் அவசரத் தேவையை வெளிப்படுத்தியுள்ளது.

தாம்பரம் மாநகர காவல் ஆணையர், அவர்கள் மேற்கொன்டுள்ள முக்கிய நடவடிக்கைகள்:

அனைத்து மகளிர் காவல் நிலையங்களைச் (AWPS) சேர்ந்த, மகளிர் உதவி ஆய்வாளர்கள், தங்கள் அதிகார எல்லை வரம்பிற்குட்பட்ட இடங்களில் இயங்கவரும் சிறார். மற்றும் சிறுமியர் பரமரிப்பு. அரசு மற்றும் தனியார் சேவை இல்லங்களுக்கு. வாரத்திற்கு இரண்டு முறை சென்றுவர உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த வருகைகள் குறிப்பாக, பெரும்பாலான சிறார்கள் இருக்கும்போது நடத்தப்பட வேண்டும் என்றும், அதிகாரிகள் மாணவிகளுடன் நேரடியாக உரையாடவும், அவர்களின் குறைகளைக் கேட்கவும், ஏதேனும் புகார் இருந்தால் உடனடியாகத் தீர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

காவல் ஆய்வாளர்கள், அனைத்து சிறார்களின் பாதுகாப்பு மற்றும் நலன்மீது, கூர்ந்து கவனம் செலுத்த வேண்டும் எனவும், குறைபாடுகள் அல்லது ஊழியர்களின் நடத்தை குறித்து ஏதேனும் குறைகள் இருந்தால் உரிய சட்டத்தின்படி கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும். என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

ஒவ்வொரு அரசு மற்றும் தனியார் சேவை இல்லத்திலும், நிர்வாக பொறுப்பில் உள்ள, ஊழியர்கள், காவல் அதிகாரிகளின் தொலைபேசி மற்றும் அலைபேசி எண்களை, சேவை வளாகத்தில் தமிழிலும் மற்றும் ஆங்கிலத்திலும் தெளிவாகக் காட்சிப்படுத்த வேண்டும். இது பராமரிப்பு இல்லங்களில் வசிக்கின்ற சிறார்களும் மற்றும் ஊழியர்களும் காவல் உதவி பெறவும், தங்களுக்கு ஏற்படும் அசௌவகரியங்கள் குறித்து புகாரளிக்க தாமதமின்றி அணுகுவதை உறுதி செய்யும்.

மேலும், ஒவ்வொரு இல்லத்திலும் ஒரு புகார் பெட்டியை அமைத்து, அதை பூட்டி சாவியை பத்திரமாக நியமிக்கப்பட்ட காவல் அதிகாரியின் பொறுப்பில் வைத்திருக்கவும், வாரத்திற்கு ஒருமுறை ஆய்வாளர்கள் அவர்களே அப்புகார் பெட்டியை திறந்து, ஏதாவது புகார் இருப்பின், உரிய சட்ட நடவடிக்கையை தாமதமின்றி எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

தாம்பரம் மாநகர காவல்துறை, அரசு மற்றும் தனியார் சேவை இல்லங்களில் வசிக்கும் அனைத்து தனிநபர்கள், குறிப்பாக சிறார்கள் மற்றும் பெண்களின் பாதுகாப்பு, கண்ணியம் மற்றும் உரிமைகளை உறுதி செய்ய உறுதிபூண்டுள்ளது. மேலும், ஆய்வுகளின்போது பராமரிப்பு இல்லங்கள் முழுமையாக ஒத்துழைக்குமாறும், பாதுகாப்பு நெறிமுறைகளை சமரசமின்றி அமல்படுத்துமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.