அண்ணாவின் 57-வது நினைவு நாளையொட்டி முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் சென்னையில் அமைதிப் பேரணி நடைபெற்றது. இந்த அமைதிப் பேரணியானது சென்னை வாலாஜா சாலையில் உள்ள அண்ணா சிலை அருகில் இருந்து புறப்பட்டு அண்ணா சதுக்கத்தைச் சென்றடைந்தது.
இந்த பேரணியில், அமைச்சர்கள் உள்பட திமுகவினர் திரளாக பேரணியில் பங்கேற்றனர். தொடர்ந்து, காமராஜர் சாலையில் அமைந்துள்ள அண்ணா நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து முதல்வர் மு.க. ஸ்டாலின், பொதுச் செயலாளர் துரைமுருகன், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன, திமுக எம்.பி.ராசா .அமைச்சர்கள் மற்றும் கட்சியினர் அஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடத்திலும் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.
தமிழ்நாட்டை அண்ணா தான் ஆள்கிறார்: ஸ்டாலின்
அண்ணாவின் புகழை நினைவுகூரும் விதமாக திமுக தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், “பேரறிஞர் அண்ணா தமிழர்களின் மனசாட்சி! நினைவுநாளில் மட்டுமல்ல, ஒவ்வொரு நாளும் அண்ணனை நினைக்கும் நாள்தான் எங்களுக்கு! அண்ணா சாலை, அண்ணா சிலைகள், அண்ணா மேம்பாலம், அண்ணா நூலகம், அண்ணா பேருந்து நிலையங்கள் என அண்ணா பெயர்சூட்டிய தமிழ்நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் அவரே நிறைந்திருக்கும்படி செய்தது திமுக அரசு.
மொழித் திணிப்பு - பண்பாட்டுத் திணிப்பு - நிதி நெருக்கடி என்றெல்லாம் வஞ்சகங்களைச் செய்துகொண்டு, துரோகிகளையெல்லாம் துணைக்கு அழைத்துக் கொண்டு வந்தாலும், பா.ஜ.க. அரசின் ஆணவத்துக்கும் ஆதிக்கத்துக்கும் அண்ணாவின் தமிழ்நாட்டில் GetOut-தான்! ஆண்டுகள் எத்தனை ஆனாலும், தமிழ்நாட்டை அண்ணாதான் ஆள்கிறார்!” எனப் பதிவிட்டுள்ளார்.

LIVE 24 X 7