தமிழ்நாடு

நகை பிரியர்களுக்கு குட் நியூஸ்: தங்கம், வெள்ளி விலை கடும் சரிவு!

வாரத்தின் முதல் நாளான இன்று தங்கம், வெள்ளி விலையில் தலை கீழ் மாற்றம் நடந்துள்ளது. தங்கம் சவரனுக்கு ரூ.7,600-க்கும், வெள்ளி கிலோ ரூ.20 ஆயிரம் குறைந்துள்ளது.

நகை பிரியர்களுக்கு குட் நியூஸ்: தங்கம், வெள்ளி விலை கடும் சரிவு!
Gold Rate
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த 2026-27 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டின் தாக்கம், நகைச்சந்தையில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில வாரங்களாக உச்சத்தில் இருந்த தங்கம் விலை, இன்று (பிப்.2) காலை யாரும் எதிர்பார்க்காத வகையில் சரிந்து நகைப்பிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்துள்ளது.

தங்கம் விலை சரிவு

நேற்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் இறக்குமதி வரி குறைப்பு அல்லது இதர வரிச் சீர்திருத்தங்கள் குறித்த அறிவிப்புகள் தங்கம் விலையில் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அந்த எதிர்பார்ப்பை உறுதி செய்யும் வகையில், இன்று காலை வர்த்தகம் தொடங்கிய உடனே தங்கம் விலை அதிரடியாகக் குறைந்தது. சனிக்கிழமை ஒரு சவரன் ரூ. 1,19,200-க்கு விற்பனையான நிலையில், இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 7,600 குறைந்துள்ளது.

சவரன் ரூ. 1.11 லட்சமாகக் குறைவு

இன்றைய காலை நிலவரப்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 950 குறைந்து, ஒரு கிராம் ரூ. 13,950-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ. 1,11,600 என்ற நிலைக்குக் கீழ் இறங்கியுள்ளது. கடந்த சில நாட்களாக ஒரு சவரன் 1.30 லட்சத்தைத் தாண்டி விற்பனை ஆகி வந்த நிலையில், இந்தத் திடீர் சரிவு இல்லத்தரசிகள் மற்றும் நகை வாங்கக் காத்திருப்பவர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெள்ளி விலை சரிவு

தங்கத்தைப் போலவே வெள்ளி விலையும் இன்று தடாலடியாகச் சரிந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ. 20 குறைந்து, ரூ. 300-க்கு விற்பனை ஆகிறது. அதேபோல், ஒரு கிலோ கட்டி வெள்ளியின் விலை ரூ. 20,000 குறைந்து, தற்போது ரூ. 3,00,000-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரே நாளில் கிலோவுக்கு 20 ஆயிரம் ரூபாய் குறைந்திருப்பது வெள்ளி முதலீட்டாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும், பொதுமக்களுக்கு இது சாதகமான சூழலாக அமைந்துள்ளது.