தமிழ்நாடு

ஏறுமுகத்தில் தங்கம், வெள்ளி விலை: கலங்கும் நகை பிரியர்கள்!

தங்கம், வெள்ளி விலை இன்று புதிய உச்சத்தை தொட்டுள்ளது. சவரனுக்கு ரூ.2,960மும், வெள்ளி கிராம் ரூ.400 உயர்ந்து நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது.

ஏறுமுகத்தில் தங்கம், வெள்ளி விலை: கலங்கும் நகை பிரியர்கள்!
Gold Rate
சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை இன்று யாரும் ஊகிக்க முடியாத அளவிற்கு வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டுள்ளது. நேற்று தங்கம் விலை சற்றே குறைந்திருந்த நிலையில், இன்று ஒரே நாளில் சவரனுக்கு சுமார் 3,000 ரூபாய் வரை உயர்ந்து நகை வாங்குவோருக்குப் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

தங்கம் விலையில் அதிரடி உயர்வு

சர்வதேசச் சந்தையில் நிலவும் பொருளாதார மாற்றங்கள் காரணமாகத் தங்கம் விலை கடந்த சில மாதங்களாகவே ஒரு லட்சம் ரூபாயைத் தாண்டி விற்பனையாகி வருகிறது. நேற்று வாரத் தொடக்கத்தில் சவரனுக்கு ரூ. 520 குறைந்து ரூ. 1,19,680-க்கு விற்பனையான தங்கம், இன்று மீண்டும் ராக்கெட் வேகத்தில் உயர்ந்துள்ளது.

இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 2,960 உயர்ந்து, ஒரு சவரன் ரூ. 1,22,640 என்ற புதிய வரலாற்று உச்சத்தை எட்டியுள்ளது. ஒரு கிராம் தங்கம் ரூ. 370 அதிகரித்து ரூ. 15,330-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையில் மெகா ஹிட்: கிராம் ரூ. 400!

தங்கத்திற்குப் போட்டியாக வெள்ளி விலையும் இன்று புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. கடந்த சில நாட்களாகவே உயர்ந்து வந்த வெள்ளி விலை, இன்று நகைப்பிரியர்கள் எதிர்பார்த்தது போலவே கிராம் 400 ரூபாயைத் தொட்டுவிட்டது. கிராமுக்கு ரூ. 13 உயர்ந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ. 400-க்கு விற்பனையாகிறது. கிலோவுக்கு ரூ. 13,000 உயர்ந்து, ஒரு கிலோ பார் வெள்ளி ரூ. 4,00,000 என்ற இமாலய விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் மற்றும் வெள்ளி விலை மாலுக்கு நாள் வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருவது பொதுமக்களை கலங்க செய்துள்ளது.