தமிழ்நாடு

நான்கு நாட்களுக்கு பிறகு குறைந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஆறுதல்!

கடந்த சில நாட்களாக உயர்ந்து வந்த தங்கம் விலை, இன்று சென்னையில் அதிரடியாகக் குறைந்து நகை வாங்குவோருக்குப் பெரும் ஆறுதலை அளித்துள்ளது.

நான்கு நாட்களுக்கு பிறகு குறைந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஆறுதல்!
Gold Rate
கடந்த சில நாட்களாக உயர்ந்து வந்த தங்கம் விலை, இன்று சென்னையில் அதிரடியாகக் குறைந்து நகை வாங்குவோருக்குப் பெரும் ஆறுதலை அளித்துள்ளது.

சர்வதேசச் சந்தையில் நிலவி வரும் போர்ச் சூழல் மற்றும் பொருளாதார மாற்றங்களால் கடந்த சில நாட்களாகத் தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்தது. குறிப்பாக, இந்த வாரத் தொடக்கத்தில் இருந்தே கிடுகிடுவென உயர்ந்த தங்கம் விலை, நேற்று ஒரு சவரன் ரூ.1,14,880 என்ற புதிய உச்சத்தைத் தொட்டது. இந்நிலையில், இன்று காலை தங்கம் விலை அதிரடியாகச் சரிவைக் கண்டுள்ளது.

ஒரே நாளில் ரூ.1,200 சரிவு

நேற்று வரை தொடர்ந்து நான்கு நாட்களாக ஏறுமுகத்தில் இருந்த தங்கம் விலை, இன்று சவரனுக்கு ரூ.1,200 வரை குறைந்துள்ளது. இதன்படி, ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.14,210-க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.1,13,680-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையில் மாற்றமில்லை

தங்கம் விலை அதிரடியாகக் குறைந்தாலும், வெள்ளி விலை கடந்த இரண்டு நாட்களாக எந்த மாற்றமும் இன்றி ஒரே விலையிலேயே நீடிக்கிறது. இதன்படி, ஒரு கிராம் வெள்ளி ரூ.275-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,75,000-க்கும் விற்பனையாகிறது.