தமிழ்நாடு

அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. சவரனுக்கு ரூ.7,600 சரிவு!

இன்றைய தினம் காலையில் தங்கம், வெள்ளி விலை சரிவை சந்தித்தது. இந்நிலையில் மாலையில் மீண்டும் தங்கம், வெள்ளி விலை கடுமையாக சரிந்து, நகைப்பிரியர்களுக்கு இனிப்பான செய்தியாக அமைந்திருக்கிறது.

அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. சவரனுக்கு ரூ.7,600 சரிவு!
Gold Rate
இந்த வாரத் தொடக்கத்தில் இருந்தே ஜெட் வேகத்தில் உயர்ந்து வந்த தங்கம் மற்றும் வெள்ளி விலை, இன்று (ஜனவரி 30) ஆச்சரியமளிக்கும் வகையில் பெருமளவு சரிந்துள்ளது. காலையில் ஒருமுறை விலை குறைந்த நிலையில், தற்போது மாலையில் மீண்டும் விலை குறைந்துள்ளது.

தங்கம் விலை சரிவு

நேற்றைய தினம் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ. 1,34,400 என்ற இமாலய விலையைத் தொட்டு மக்களைத் திகைக்க வைத்தது. ஆனால், இன்று காலையிலேயே சவரனுக்கு ரூ. 4,800 குறைந்து நிம்மதியளித்தது. இந்நிலையில், மாலை நேரத்தில் மீண்டும் சவரனுக்கு ரூ. 2,800 அதிரடியாகக் குறைந்துள்ளது.

இதன் மூலம், இன்று ஒரே நாளில் மட்டும் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ. 7,600 குறைந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, ஒரு கிராம் தங்கம் ரூ. 15,850-க்கும், ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ. 1,26,800-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை வீழ்ச்சி

தங்கத்தைப் போலவே வெள்ளி விலையும் இன்று தடாலடியாகச் சரிந்துள்ளது. நேற்று ஒரு கிலோ வெள்ளி ரூ. 4,25,000-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், இன்று காலையில் 10,000 ரூபாயும், தற்போது மாலையில் மீண்டும் 10,000 ரூபாயும் குறைந்துள்ளது.

ஒரே நாளில் கிலோவுக்கு ரூ. 20,000 குறைந்ததால், தற்போது ஒரு கிலோ வெள்ளி ரூ. 4,05,000-க்கும், ஒரு கிராம் வெள்ளி ரூ. 405-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.